Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சமூக நீதிக்கு எதிரான இயக்கம் திமுக- சி.பி.எம் தாக்கு.

சி.பி.எம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.. கோவிந்தசாமி காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட இருபதாயிரம் பேருடன் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் விழா நடந்தது அதில் சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளின் ஏனைய எம்.எல்.ஏக்களுக்கும் தூண்டிலை வீசினார் கருணாநிதி. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் போன்ற அடிப்படை கொள்கைகளை கம்யூனிஸ்ட்டுகள் ஒருபோதும் மாற்றிக் கொண்டது இல்லை. இனியும் மாற்றிக் கொள்ளப் போவதும் இல்லை. அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு முதல் தொழிற்சங்க உரிமை மறுப்பு வரை தி.மு..தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தி.மு.. அங்கம் வகிக்கும் மத்திய அரசு, பல்வேறு விஷயங்களில் மாநில உரிமைகளை அப்பட்டமாக பறிக்க முயல்வதும், மாநில சுயாட்சிக்காக முழங்கிய தி.மு.. மனு அனுப்புவதோடு தன்னை நிறுத்திக் கொள்வதும்தான் இப்போது நடக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியை பொருத்தவரை மாற்றுக் கொள்கையை முன்வைத்து மக்கள் நலனுக்காக போராடி வருகிறது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், மாநிலத்தில் ஆளும் தி.மு.. அரசும் மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தும்போது, அதை எதிர்த்துப் போராடுவதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எந்த தயக்கமும் இல்லை. அவ்வாறு போராடுவது தன்னுடைய அடிப்படை கடமை என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. மாறாக, தாராளமயமாக்கல் கொள்கைகளை தழுவியுள்ளதால், தடுமாறுவதும், நிலை மாறுவதும் தி.மு..தானே தவிர, கம்யூனிஸ்ட்டுகள் அல்ல. தி.மு.. அரசின் சாதனைகளை மார்க்சிஸ்ட் கட்சி மறைக்கப் பார்க்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். கடுமையான விலைவாசி உயர்வு, வரலாறு காணாத மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்றவற்றையெல்லாம் யாரும் மறைக்க முடியாது.சமூக நீதிக்காகவே தோன்றிய இயக்கம் என்று தி.மு.. கூறிக் கொள்கிறது. ஆனால், தி.மு.. அரசின் நடவடிக்கைகள் சமூக நீதிக்கு எதிராகவே உள்ளன. சமூக நீதிக்காக போராடுவோர் மீது காவல் துறையை ஏவி விடுவதும், பொய் வழக்கு போடுவதும்தான் தி.மு.. அரசின் நடைமுறையாக உள்ளது. உத்தபுரம் முதல் ..எஸ். அதிகாரி உமாசங்கர் விவகாரம் வரை தலித் விரோத அணுகுமுறையையே தி.மு.. அரசு பின்பற்றுகிறது. இவை குறித்த செய்திகள் எல்லாம் யாரும் மறைக்காமல், பத்திரிகைகளில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தி.மு..வுக்கு அலை அலையாக ஆதரவு பெருகவில்லை. மாறாக, மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் காரணமாக அதிருப்தி அலைதான் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Exit mobile version