Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சமத்துவம, சுதந்திரம், தற்கொலை : ரதன்

மற்றவர்களின் வாழ்க்கை The Lives of Others

விசாரணைக் கூடம், கைதுசெய்யப்பட்டவர் தொடர்ந்து விசாரிக்கப்படுகின்றார். கைதி அதே விடையை தொடர்ந்து கூறுகின்றார். விசாரணை தொடர்கின்றது. “நான் சிறிது நேரம் நித்திரை கொள்ள வேண்டும்” கைதி களைத்துப் போய் கூறுகின்றார். இக் காட்சிகள் ஒளிப்பதிவு நாடாவில் பதிவு செய்யப்பட்டு ஒரு குழுவினருக்கு காட்டப்படுகின்றது. இவர்கள் உளவுத் துறை விசாரணை பயிற்சி பெறுவோர். இவர்களில் ஒருவன் கேட்கின்றாhன்” இந்த விசாரணை முறை மனிதத் தன்மையற்றது”. பயிற்சியாளரின் பதில் “உண்மையைக் கூறுபவன் ஒரு மணித்தியால விசாரணையில் ஒரே கேள்வியைக் கேட்கும் பொழுது, கோபப்படுவான், ஆத்திரமடைவான், பொய் கூறுபவன் மேலும் அமைதியாக, பொறுமையாக விடை கூறுவான். ஓன்றைக் கவனித்தியா? இவனது விடைகள் ஒரே மாதிரி, எந்த ஒரு சொல் மாற்றமும் இன்றி விடை கூறுகின்றான், எனவே இவன் பொய் கூறுகின்றாhன்”. ஒளிப்பதிவு நாடா மேலும் சுழல்கின்றது. கைதி உண்மையைக் கூறிவிடுகின்றான். விசாரணை செய்பவர் முகத்தில் புன்னகை.

இது நடைபெற்ற இடம் ஜி.டி.ஆர் எனப்படும் கிழக்கு ஜேர்மனியின் STASI (The Ministerium für Staatssicherheit (Ministry for State Security விசாரணைக் கூடத்தில். கிழக்கு ஜேர்மனியின் இடது சாரிக் கட்சி(Socialist Unity Party of Germany (SED)) யுடன் மிக நெருக்கமான அமைப்பு இது. 1950 களில் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பு 1989 ல் புதிய பெயருடன் மாற்றம் பெற்றது. இவ் அமைப்பு சோவியத் ய+னியனின் கே.ஜி.பி அமைப்பை ஒத்ததாக அமைக்கப்பட்டது. இவர்கள் இடது சாரி அமைப்புக்களுக்கு ஆதரவிளிப்பதிலும் ஆர்வம் காட்டினர். 1973 சிலிப் புரடசியில் இவர்கள் இடது சாரிகளுக்கு கைகொடுத்தனர். மேற்கு ஜெர்மனியின் சிவப்பு இராணுவத்தினருக்கு பெரும் ஆதரவு வழங்கினர். Red Army Faction (RAF).2007 ல் பி;பி.சி ன் கருத்துப்படி இவ் அமைப்பினர் கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஒவ்வொரு ஏழு பிரசைகளுக்கும், ஒரு உளவாளி என ஏற்பாடு செய்திருந்தனர். 1981 ல் போப் ஜோன் போல் 11 ன் மீதான கொலை முயற்சி, சுவீடன் பத்திரிகையாளர் Cats Falck (இவர் சுவீடன் தொலைக்காட்சி நிருபர். சுவீடனில் இருந்து கம்ய+னிசிய ஜரோப்பிய நாடுகளுக்கு ஆயதம் கடத்துவது பற்றிய விடயங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.) 1953 ய+லை 11ல் கொல்லப்பட்டார். சுவீடனின் ஸ்ரொக்கோம் கால்வாயில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. காரணங்களும், கர்த்தாக்களும் அறியப்படமால் இருந்த இவரது மரணம், பின்னர் ஸ்ராசியுடன் தொடர்புபடுத்தப்பட்டது.

இவற்றை விட எழுத்தாளாகள் Christa Wolf. Richard Clements, Tom Driberg figure skaters Katarina Witt> Ingo Steuer, அரசியல்வாதிகள்

Ibrahim Böhme, Gert Bastianகிறிஸ்ரினா வோல்ப், போன்ற பலர் இவர்களால் கொல்லப்பட்டனர்.

1974 ல் 55.700 பேரை முழு நேர ஊழியர்களாகக் கொண்ட ஸ்ரசி 1983ல் 85,000 ஆக உயர்ந்திருந்தது. இவர்கள் மேற்கு ஜேர்மனியில் பல நிறுவனங்களில் முதலீட்டில் ஈடுபட்டிருந்தனர். இதன் மூலம் பெறும் பணம் வெளிநாட்டு இடது சாரி நடவடிக்கைகளுக்கு பயன்பட்டது. இவர்களது வரவு செலவு திட்டத் தொகை சுமார் 400 மில்லியன் மார்க்- ஒரு வருடத்துக்கு. இவர்களது ஊழியர்கள் பட்டதாரிகளாக இருந்தனர். அத்துடன் சோசலிசக் கொள்கைகளை உள்வாங்கியிருந்தனர். கிழக்கு ஜேர்மனியின் அனைத்து நடவடிக்கைகளையும் மிகவும் உன்னிப்பாக கவனித்த இவர்கள் அனைத்து பொது மக்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்தனர். இதற்கான தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது. (The lexicon of the Stasi:Language in the Service of the State D. Lewis University of Exeter 1992ல் ஜேர்மனி ல் அறிமுகப்படுத்தப்பட்ட ((declassification act) சட்டத்தின் பிரகாரம் ஸ்ரசியின் நடவடிக்கைகள் , பொது மக்களை ப்பற்றி சேகரித்த கோப்புக்களை அவரவர் பார்க்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

இந்த ஸ்ரசியின் விசாரணைக் கூடத்தில் இருந்து ஆரம்பமாகுகின்றது “மற்றவர்களின் வாழ்க்கை” எனும் ஜேர்மனியப் படம். ஜெராட் வைசலர் ஓர் ஸ்ரசி கப்டன். இவர் உளவுத்துறையில் ஓர் நம்பிக்கை நடசத்திரம். இவரிடம் புதிதாக ஒப்படைக்கப்பட்ட விடயம் ஒரு தம்பதிகளை கண்கானிப்பது. அவர்கள் பிரபல நாடக இயக்குனர் Georg Dreyman ம், அவரது மனைவியும், நடிகையுமான Christa-Maria Sieland. வைசலரின் முன்னால் பாடசாலைத் தோழனும், தற்சமயம் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பாளருமான Lieutenant Colonel Anton Grubitz வைசலரை டேர்மனின் நாடகத்துக்கு அழைப்பு விடுக்கின்றார். அங்கு அங்கு அமைச்சர் புறுனோ கெம்ப்பும் வருகின்றார். புறுனோ கொலனிலிடம், டேர்மன் அரசுக்கு எதிராக செயல்படுகின்றார். அவரை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் அவரை முழுமையாக கவனிக்க உத்தரவிடுகின்றார். அமைச்சருக்கு டேர்மனின் மனைவியும் நடிகையுமான கிரிஸ்ரீனா மீது ஓர் கண்.

வைசலர், டேர்மனின் தங்கியிருக்கும் அப்பார்டமென்ற் சுவரினுள் ஒட்டுக் கேட்கும் கருவிகளை பொருத்துகின்றார். வைசலர் டேர்மனின் நடவடிக்கைகளை ஒட்டுக் கேட்கின்றார். அத்துடன் அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்கின்றனர். அமைச்சர் ஒரு நாள் வீதியில் நடந்து செல்லும் கிரிஸ்ரீனாவை வற்புறுத்தி காரில் ஏற்றி, உறவு கொள்கின்றார். இதனை வைசலர் அறிந்து கொண்டு, ஒட்டுக் கேட்கும் கருவியில் ஏற்படும் அதிர்வினால் ஏற்படுத்தப்பட்ட கதவு திறக்கச் சொல்லும் சத்தத்தை ஏற்படுத்திய பொழுது, டேர்மன் வீதிக்கு வருகின்றார். அவர் கிறிஸ்ரீனா, அமைச்சரின் காரில் இருந்து இறங்குவதை காண்கின்றார்.

டேர்மனின் மிகவும் நெருங்கிய நண்பனும், நாடக இயக்குளருமான அல்பேர்ட் ஜேர்சக்கா ஏழு வருட மௌனத்தின் பின்னர் தற்கொலை செய்து கொள்கின்றார். இவர் ஸ்ரசியின் பட்டியலில் இடம் பெற்று மிகவும் கடுமையாக கண்காணிக்கப்பட்டவர்.. இதனால் தொடர்ச்சியாக மௌனமான இருந்தவர். இதன் பின்னரும் மௌனமாக இருக்க முடியாமல் மேற்கு ஜோமனியில் இருந்து வெளிவரும் Der Spiegel சஞ்சிகைக்கு கிழக்கு ஜோமனியின் கொள்கைகளையும், அதிகரித்துள்ள தற்கொலைகள் பற்றியும் கட்டுரை எழுதுகின்றார். இவரது மற்றொரு நண்பர் கேக் பெட்டியினுள், கேக்கின் கீழ், ஓர் சிறிய ரைப் ரைட்டரை கொண்டு வந்து பொடுக்கின்றார். இந்த ரைப் ரைட்டரை அறையின் நிலக் கீழ் வைக்கின்றார்கள். இந்தக் கட்டுரையை மேற்கு ஜேர்மனி பத்திரிகைiயாளர் எல்லையைக் கடந்து வந்து பெற்றுச் செல்கின்றார். இவை அனைத்தையும் கண்காணிக்கும் வைசலர், டேர்மனுக்கு எதிராக சகல ஆதாரங்கள் இருந்தும், பத்திரிகையாளர் கடந்து செல்லும் எல்லையை அறிந்திருந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேற்கு ஜேர்மனி சஞ்கிகையில் கட்டுரை வெளிவந்ததும் கொலனல், வைசலரிடம் கோபம் கொள்கின்றார். கட்டுரையை ரைப்படித்த ரைப்ரைட்டரை தேடுகின்றனர். டேர்மனின் வீடு சோதனையிடப்படுகின்றது. டேர்மனின் மனைவி கிறிஸ்ரா மரியா கைது செய்யப்படுகின்றார். கடுமையான விசாரணையின் பின்னர் கிறிஸ்ரினா உண்மையைக் கூறுகின்றார். விடுதலை செய்யப்படும் கிறிஸ்ரினா வீட்டிற்கு வந்து குளிக்கும் பொழுது, ஸ்ரிசி வீட்டை சோதனை செய்கின்றது. அவர்கள் ரைப்ரைட்டர் ஒளித்து வைத்திருந்த இ;டத்தை அறிகின்றனர். வீட்டை விட்டு வேகமாக வெளியேறும் கிறிஸ்ரினா வீதியில் வேகமாக வந்த லொறியில் அடிபட்டு இறந்து விடுகின்றார்.

காலம் கரைகின்றது இரு ஜேர்மனிகளும் ஒன்றாகின்றன. ஸ்ரசி நிறுவனம் பெயர் மாற்றப்பட்டு புதிய வடிவமெடுக்கின்றது. வைசலர் இப்பொழுது பத்திரிகை விநியோகிக்கின்றார். ஒரு நாடக அரங்கில் டேர்மன், முன்னால் அமைச்சரை சந்திக்கின்றார். இருவரும் உரையாடும் பொழுது டோமன் கேட்கின்றார் “அனைவரையும் கண்காணித்த உங்கள் அரசு ஏன் என்னை கண்காணிக்கவில்லை?” எனக் கேட்கின்றார். அதற்கு பதிலளித்த முன்னால் அமைச்சர் “உன்னையும் முழுமையாக கண்காணித்தோம். உனது வீட்டு விளக்கு சுவிட்ச்சின் உள் பகுதியை பார்” எனக் கூறுகின்றார். வீட்டிற்கு வரும் டேர்மன் உண்மையை உணர்ந்து கொள்கின்றார். 1992 ல் ஏற்பட்ட சட்ட மாற்றத்தின் பின்னர் டேர்மன் தனது விசாரணைக் கோப்புக்களை பார்க்கின்றார். தனது மனைவியிடம் பெற்ற வாக்கு மூலத்தையும் பார்க்கின்றார்.

வீதியில் பத்திரிகை விநியோகிக்கும் வைசலர், டேர்மனின் மிகப் பெரிய படத்துடனான புத்தகக் கடையில் டேர்மனின் புதிய நாவலை வாங்குகின்றார். நாவலின் முதல் பக்கம் வைசலரின் ஒப்பரேசனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

படத்தின் முதல் பகுதியில் வைசலர் ஓர் உயிரற்ற சடம் போல், இயந்திர மனிதன் போல் காட்டப்ப:டுகின்றார். பாலியல் தொழிலாளியுடன் உறவு கொள்ளும் பொழுது, இயந்திரத் தன்மையை வெளிப்படுத்துகின்றார். போகப் போக இவரில் மாற்றங்கள் தெரிகின்றன. விசாரணைகளும் கடுமையாக உள்ளன.

அரசியல், ஒரு தனிமனிதனின் வேலை, சுதந்திரம், கற்பனைத்திறன், பொழுது போக்குகள் போன்ற சகலதையும் பறிக்கின்றது. கம்ய+னிச நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களும், சுதந்திரமின்மையும் இவ்வாறான படைப்புக்களுடாக வெளவருகின்றன. இடது சாரி அரசுகள் அமைந்துள்ள நாடுகளில் தற்கொலைகள் அதிகம். இதற்கான பிரதான காரணம் சுதந்திரமாக கருத்தைக் கூற முடியாமல் உள்ளமையே. உலகின் அதிக தற்கொலைசெய்பவர்கள் பட்டியலில் நாடுகளில் இலங்கை முதலிடம் பெறுகின்றது. கிழக்கு ஜேர்மனியை ஒத்த அரசியல் அடக்கு முறையுள்ள நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கிழக்கு ஜேர்மனியின் உள்ளரங்கை பதிவு செய்துள்ளது.

உங்களது வீட்டு யன்னலினால் நீங்கள் காற்றை சுவாசிக்கலாம். யன்னலினூடாக வெளியே நடப்பவற்றை பார்க்கக் கூடாது. அதற்கான சுதந்திரம் சட்டப்பத்திரஙகளில் இருந்தாலும், இயல்பு வாழ்க்கையில் இல்லை. இது அமெரிக்கா பற்றி ஒலிவர் ஸ்ரோன் கூறிய கூற்று. இது கிழக்கு ஜேர்மனி போன்ற நாடுகளுக்கும் பொருந்தும். இப் படம் மனிதத்தின் கூறுகளை கூறுபோடும் உளவாளிகளையும், அவர்களை வழிநடாத்தும் அரசினையும் அம்பலப்படுத்தியுள்ளது.

இயக்குனர் ; Florian Henckel von Donnersmarckன் முதல் படம். Ulrich Muhe வைசலராக சிறப்பாக நடித்திருந்தார். எந்த ஒரு அரசியல் நடவடிக்கையிலும் வலியை சுமப்பவர்கள் சாதாரண பிரசைகளே.

இப்படத்தை போர்ச் சூழலின் பாதிப்புக்களை உள்வாங்கிய நாங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். பல நினைவுகளும், புதிய விடயங்களும் வெளிப்படும்.

புpன்னிணைப்பு

ஊலக சுகாதார மையத்தின் தற்கொலை ப்பட்டியல்

Suicide Rates (per 100,000), by country, year, and gender.

Country Year Males Females Total
POLAND 0 25.9 4.9 30.8
REPUBLIC OF MOLDOVA 0 26.7 4.1 30.8
YUGOSLAVIA 90 21.6 9.2 30.8
CZECH REPUBLIC 0 26 6.7 32.7
BULGARIA 0 25.2 9.1 34.3
LUXEMBOURG 1 23.9 10.7 34.6
FRANCE 99 26.1 9.4 35.5
CUBA 96 24.5 12 36.5
SWITZERLAND 99 26.5 10 36.5
AUSTRIA 1 27.3 9.8 37.1
BELGIUM 96 29.4 10.7 40.1
CROATIA 0 32.9 10.3 43.2
FINLAND 0 34.6 10.9 45.5
JAPAN 99 36.5 14.1 50.6
KAZAKHSTAN 99 46.4 8.6 55
ESTONIA 0 45.8 11.9 57.7
HUNGARY 1 47.1 13 60.1
SLOVENIA 99 47.3 13.4 60.7
SRI LANKA 91 44.6 16.8 61.4
UKRAINE 0 52.1 10 62.1
LATVIA 0 56.6 11.9 68.5
BELARUS 0 63.6 9.5 73.1
RUSSIAN FEDERATION 0 70.6 11.9 82.5
LITHUANIA 0 75.6 16.1 91.7
Exit mobile version