இன்று சனிக்கிளமை இலங்கைப் பொலீசார் மூன்று இங்கிலாந்து தொலைக்காட்சி ஊடகவியலாளர்களைக் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். நிக் பட்டன் என்ற சனல் 4 தொலைக்காட்சியின் ஆசியப் பிராந்திய தொடர்பாளர், பேசி டூ என்ற செய்தித் தயாரிப்பாளர்ருடனும், ஒளிப்படப் பிடிப்பாளர் மர் ஜஸ்பர் உடனும் கைதுசெய்து விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இம்மூவரும் இலங்கையில் நடைபெறும் யுத்தச் சம்பங்களை பிரித்தானியச் செய்திச் சேவைக்கு வழங்கி வந்தவர்களாவர்.
தமிழ் அகதிகள் தடுப்பு முகாம்களில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகள் தொடர்பாக இம் மூவரும் அண்மையில் வெளியிட்ட செய்திகள் தொடர்பாகவே இக்கைது இடம்பெற்றிருக்கலாம் என செய்தி அமைப்புக்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட நிக் பட்டன் தெரிவித்தார்.