Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சனல் 4 ஆவணப்படம் : இணக்கத்திற்குத் தயாராகும் இலங்கை அரசு

சனல் 4 வெளியிட்ட காணொளிக் காட்சிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கிறிஸ்டோபர் ஹெய்ன்ஸுடன் கலந்துரையாட விருப்பம் கொண்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை அரசு ஒரு வைகையான இணக்கத்திற்கு வருவதற்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. மேற்கு நாடுகள் இலங்கைக்கு வழங்கும் தற்காலிக அழுத்தங்கள் தமிழ் மக்கள் மீதான அக்கறையுடையதோ அன்றி மனிதாபிமான நடவடிக்கையோ அல்ல. இலங்கை அரசை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளே.
70 களின் மத்தியில் வியட்னாமில் நடைபெற்ற 1 மில்லியன் வரையான படுகொலைகளை பொல்பொட்டின் மீது அமரிக்க அரசு சுமத்தியிருந்தது. ஒரு புறத்தைல் அமரிக்க உளவு நிறுவனமும் மறுபுறத்தில் வியட்னாமிய ஆக்கிரமிப்பாளர்களும் நடத்திய அனைத்துப் படுகொலைகளுக்கும் எதிரான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் அனைத்துப் படுகொலைகளுக்கும் பொல் பொட் மட்டுமே பொறுப்பானவர் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு அமரிக்க நாடகம் நிறைவடைந்தது.
ஏகாதிபத்தியங்களோடு குறித்த இணக்க அரசியலுக்கு இலங்கை அரசு முன்வருமானால் இலங்கை அரசிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் கிடப்பில் போடப்படுவது மட்டுமன்றி புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை முன்வைத்து அனைத்துப் போர்க்குற்றங்களையும் புலிகள் மீது சுமத்துகின்ற அபாயம் காணப்படுகிறது.
ஆக, இன்றைய சூழலில் ஏகாதிபத்தியங்களின் மக்கள் விரோத அரசியலைப் புரிந்துகொண்டு சமூகப்பற்றுள்ள போராடும் மக்கள் பிரிவினருடனான இணைவை ஏற்படுத்திக்கொள்வதும், இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேசப் பிரசார இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதும் அவசியமானது.

ஐ,நா அறிக்கையும் சனல் 4 ஆவணப்படமும் பல யாராலும் பயன்படுத்திக்கொள்ள வகையிலான இடைவெளிகளைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துகொண்டு மக்கள் பற்றுள்ளவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதும் புதிய அரசியல் திட்டத்தை வகுத்துக்கொள்வதும் அவசியமானது.

Exit mobile version