Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சந்திரிகா பௌத்த அடிப்படைவாத்திற்கு எதிராக : முன்னைய ஜனாதிபத்தியின் பிந்திய ஞானம்

Cbkசந்திரிக்கா குமராணதுங்க பொதுபல சேனாவிற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் அமரிக்காவிலும் தனது தளங்களைக் கொண்டியங்கும் பௌத்த பயங்கரவாத அமைப்பிற்கு இலங்கையில் கோத்தாபய பின்னணியில் செயற்படுகிறார். மத்துகம பட்டபுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள தெற்காசியாலேயே உயரமான புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் வேளையில் சந்திரிக்கா பொதுபல சேனாவிற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறிய தரப்பினர் முன்னெடுத்து வரும் அடிப்படைவாத வேலைத்திட்டங்கள் இந்த விதத்திலேயே தொடர்ந்தும் சென்றரால் நாட்டின் பேரழிவுக்கும், சேதத்திற்கும் காரணமாக அமைந்து விடும். இவ்வாறான அடிப்படைவாதிகள் எழுச்சி பெறும் சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தலையிட்டு அதனை அடக்க வேண்டும். இது அரசாங்கத்தினதும், ஆட்சியாளர்களினதும் பொறுப்பு. இதனை விடுத்து, அவர்களுக்கு உந்து சக்தியை கொடுத்தும் கொள்கையை பின்பற்றினால் பாரிய அழிவே ஏற்படும் என்று தெரிவித்தார்.
சந்திரிக்கா உட்பட இன்றைய முன்னிலை சோசலிசக் கட்சி ஈறாக தமிழ்ப் பேசும் சிறுபான்மை தேசிய இனங்களில் அடிப்படை உரிமைகளைக் கூட மறுத்து சிங்கள பௌத்தத்தை தீனிபோட்டு வளர்த்தன. உச்சபட்ட வடிவமே பொதுபல சேனா. இன்று அன்னியர்களுக்கு முழு இலங்கையையும் அடகுவைக்கும் இந்த அமைப்பு அழிக்கப்படுவதற்கு ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களோடு சிங்களத் தொழிலாளர்களும் இணைந்து பேரினவாத்ததிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.

Exit mobile version