சண்டே லீடர் பத்திரிகையாளர் மீது மூன்றுபேர் கொண்டகுழு துப்பாக்கிச் சூடு
இனியொரு...
சண்டே லீடர் பத்திரிகையாளரான பராஸ் சௌகதலி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். ஈ கூட நுளைய முடியாத மகிந்த ராஜபக்சவின் கோட்டைக்குள் நுளைந்து இவர் வீட்டுக்குச் சென்று நேற்று மாலை சௌகத் அலியின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை ஊகிக்க அதிக நேரம் ஆகாது.
மூன்று பேர் கொண்ட குழுவினால் தாக்குதலுக்கு உள்ளான சௌகத் அலி இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.