சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை நேற்று மாலை மாவோயிஸ்டுக்கள் கடத்தி உள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மாலை மாவோயிஸ்டுக்கள் கடத்தி உள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களை அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து வெளியேற்றி அவற்றை பல் தேசிய நிறுவனங்களுக்கு இந்திய அரசு விற்பனை செய்து வருகிறது. இதற்கு எதிராக மாவோயிஸ்டுக்கள் போரடி வருகிறார்கள்.
கடத்தப்பட்ட கலெக்டர், தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். சட்டீஸ்கரில் சுக்மா என்ற புதிய மாவட்டம் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் முதல் கலெக்டராக அலெக்ஸ் பால்மேனன் நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற பின், மாவோயிஸ்டுக்கள் இயக்கத்தில் கிராம மக்கள் சேர்வதை தடுக்க பல திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார். கிராம சுவராஸ் அபியான் என்ற பெயரில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, கேரலபால் பகுதியில் உள்ள மஜ்ஹிபாரா கிராமத்தில் நேற்று மக்களை சந்தித்து பேசினார் அலெக்ஸ்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு பைக்கில் திரும்பும்போது அலெக்ஸை நக்சல்கள் கடத்தினர். அவருடன் வந்த 2 பாதுகாவலர்கள் மோதலின் போது மரணித்தனர். கடத்தப்பட்ட இடம், ஒடிஷாவின் மால்கன்கிரி மற்றும் ஆந்திராவின் கம்மம் மாவட்ட எல்லையில் உள்ளது. இந்த 3 பகுதிகளும் மாவோயிஸ்டுக்களின் ஆதிக்கம் நிறைந்தவை.
பல்தேசியக் கம்பனிகளுக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்ட முற்பட்டதாலேயே கலக்டரை மாவோயிஸ்டுக்கள் கடத்தியிருப்பதாக பரவலாக கருத்து நிலவுகிறது . மாவோயிஸ்ட் தாக்குதல் பட்டியலில் எனது மகனின் பெயரும் இருந்தது என சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் தந்தை வரதாஸ் கூறினார்.. சுக்மா மாவட்டத்தின் கேரலபால், அடர்ந்த காட்டுப் பகுதிகள் நிறைந்தது. . அதனால் பாதுகாப்புப் படையினர் அங்கு எளிதில் நுழைய முடியாது. அந்த காட்டுப் பகுதியில்தான் கலெக்டரை சிறை வைத்திருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கை போனில் தொடர்பு கொண்டு, நிலைமையை விசாரித்தார். கலெக்டரை மீட்க அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதி அளித்தார். ‘‘மாவோயிஸ்டுக்களிடம் இருந்து தகவல் வந்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காக காத்திருக்கிறோம்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பதற்றம் நீடிக்கிறது.
பழங்குடி மக்களின் வாழ்விடங்களில் மில்லியன்களை உறிஞ்ச எண்ணும்பன் நாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். மாவோயிஸ்டுக்கள் அதற்குத் தலைமை தாங்குகின்றனர்.
இதற்கு முன்னதாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு போலி என்கவுன்டரில் இந்திய அரச படைகளால் பல மாவோயிஸ்டுக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.