தனிமையான தீவான நவ்றுவிற்கு செல்வதற்குப் பதிலாக இந்தியாவிற்கே திரும்பச் சென்று நண்பர்களோடும் குடும்பங்களோடும் வாழுமாறு அகதிகளைக் கேட்டுக்கொண்டதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தை நிராகரித்த காரணத்தால் நவ்று தீவிற்கு செல்ல நேரிட்டதாகவும் அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார்.
அகதிகளைச் சிறப்பு முகாம்கள் என்னும் சிறைகளில் அடைத்துவைத்து துன்புறுத்தும் தமிழ் நாட்ட்டை நோக்கி அவர்கள் செல்ல விரும்பவில்லை என்பது வெளிப்படையானதே. அகதிகளுக்கான ஒப்பந்ததில் கைச்சாத்திடாத இந்திய அரசு தமிழ் அகதிகளைச் அடிப்படை மனித உரிமைகளைக் கூட மதிக்காமல் நடத்தி வருகிறது.
அவுஸ்திரேலியாவின் வலதுசாரிக் கட்சியின் அமைச்சர் மொரிசனுக்கு 157 அகதிகளை ஏற்றுக்கொள்வது பிரச்சனைக்குரியதல்ல. படகு அகதிகளை நிறுத்துவோம் எனத் தேர்தல் பிரச்சாரம் செய்து ஆட்சியைக் கையகப்படுத்திக்கொண்ட மொரிசன் தேர்தலில் வாக்குப்பொறுக்கி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற தமிழ் அகதிகளை காட்சிப் பொருளாக்கியுள்ளார்.
அகதிகளைப் பாதுகாப்பதாகக் கூறும் அறிக்கை விடுப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்கிறது. அகதி உரிமை நிராகரிக்கப்பட்டது ஐ.ஓ,எம் அமைப்புடன் தொடர்புகொண்டு சிறு தொகை பணத்தை வழங்கி அவர்களை இனக்கொலை அரசுகளை நோக்கி அனுப்பிவைக்கிறது.
அகதிகள்ப் பாதுகாப்பதற்கான போராட்டங்கள் உலகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும்.