திவிநெகும சட்டம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதனை விடுத்து அரசாங்கம் எதிர்த்திசையில் பயணம் செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்கால அதிகாரப் பகிர்வின் போது 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாக அமைந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கம் மெய்யாகவே அதிகாரப் பகிர்வில் நாட்டம் காட்டுவதாக தென்படவில்லை என கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.