சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, ஜயம்பதி விக்ரமரட்ன, ஜே.சீ. வெலியமுன மற்றும் எம்.சுமந்திரன் ஆகியோருக்கு இவ்வாறு அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கொஹூவல காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, அச்சுறுத்தல் கடிதம் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன வெலிக்கடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தலமை நீதிபதியை சட்டத்திற்கு புறம்பான வகையில் மகிந்த அரசு பணி நீக்கம் செய்த விவகாரத்தில் அரசிற்கு எதிராகச் செயற்பட்ட சட்டத்தரணிகளுக்கே இவ்வாறான அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.