உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது நினைவு தினத்தை அனுஸ்டித்து பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பும் போது இன்று அதிகாலை 2 மணியளவில் சஞ்ஜீவ பண்டார தாக்குதலுக்குள்ளானதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
களனி பல்கலைக்கழகத்திலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் பாதுகாப்பு அதிகாரிகள் என சந்தேகிப்பதாக சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது