Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சசிகலா நடராஜனுக்கு 2-ஆண்டு சிறை.கருணாநிதிக்கு?

மக்கள் விரோத ஜெயலலிதா ஆட்சியில் தமிழகமே ஊழல் சுடுகாடாக மாற்றப்பட்டது. ஆடம்பரமான வளர்ப்பு மகன் திருமணம், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களிலும் ஜெயலலிதா, சசிகலா கும்பல் ஈடுபட்டு வந்தது. அப்போது கடந்த கால ஆட்சியில்
1994 – ல் லண்டனில் இருந்து எம்.நடராஜன் லெக்சஸ் என்ற கார் இறக்குமதி செய்தார். பழைய கார் என்று கூறி வரி கணக்கில் காட்டினார். புதிய காரை பழைய கார் என்று கூறி 1.6கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது பின்பு தெரியவந்தது.இதையடுத்து நடராஜன் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.எம்.நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.வரி ஏய்ப்பு வழக்கில் மேலும் 3 பேருக்கு தண்டனை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்.தண்டனை மூன்று பேரில் முன்னாள் இந்தியன் வங்கி மேலாளர் சுஜாரிதாவும் ஒருவர். இவர் அமிராமபுரம் கிளை இந்தியன் வங்கியில் மேலாளராக இருந்த போது வரி ஏய்ப்புக்கு உதவியுள்ளார் என்று குற்றச்சாட்டு.மற்ற இருவரில் நடராஜனின் உறவினர் ஜேஜே டிவிபாஸ்கர் மற்றும் யோகேஸ் பாலகிருஷ்ணன்.தண்டனையை எதிர்த்து நான்கு பேரும் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்

.

 

 கருணாநிதி யோக்கியமானவரா?

இன்று கருணாநிதி குடும்பத்தினரிடம் உள்ள சொத்துக்களில் கால் பங்கு கூட ஜெயலலிதாவிட இருக்காது அந்த அளவுக்கு கருணாநிதி குடும்பத்தினர் ஆசியாவின் கோடீஸ்வரக் குடும்பத்தில் ஒருவராக உள்ளனர். சககரியா ஊழலில் தொடங்கி இந்தியாவின் ஆகப்பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை மலை விழுங்கி மகாதேவந்தான் இந்த கருணாநிதியும். ஆனால் மக்கள் விரோத ஜெயலலிதாவுக்கும் மக்கள் விரோத கருணாநிதிக்கும் இடையிலான வேறு பாடு என்னவென்றால் ஜெயலலிதா ஊழல் செய்தால் சிக்கிக் கொள்வார். அல்லது சிக்கிக் கொண்டமாதிரி தோற்றமாவது உருவாகும். ஆனால் கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல் செய்து ஆதாரமே இல்லாமல் ஊழல் செய்கிறவர். இன்று தமிழநாட்டில் கட்டப்பஞ்சாயத்து நில அப்கரிப்பு, வீடு அபகரிப்பு, போலிப் பட்டாக்களை தயரித்து நிலங்களை கொள்ளையடிப்பது என்று அரசியலுக்கும் சினிமாவுக்கும் வந்த கருணாநிதியின் வாரிசுகள் போக மீதி பேர் இந்தத் தொழில்களில்தான் ஈடுபடுகின்றனர். கருணாநிதியின் ஒரு மகனான மு.க, முத்துவின் மகன் அறிவுநிதி பன்னாட்டு நிறுவனங்களுக்காக நில ஆக்ரமிப்பில் ஈடுபடுவதும், கனிமொழி செந்தமிழ் நகர் என்னும் பெயரில் ஊர் ஊருக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்வதும். அவரே சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதும் ஊரறிந்த ரகசியம். ஆக மக்கள் வீரோதிகளான கருணா, ஜெயயலிதா கும்பலை ஒட்டு மொத்தமாக வீழ்த்துவதே தமிழகத்தின் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்.

Exit mobile version