08.03.2009.
சங்கரன்கோவில் அருகே கோவிலில் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட முயன்ற தலித் மக்களில் 2 பேர் கொடூரமாக படு கொலை செய்யப்பட்டனர். தீண்டாமைக் கொடுமையின் உச்சகட்டமாக நடந்துள்ள இந்தக் கொலை வெறியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது செந்தட்டி கிராமம். இங்கு அனைத்து சமுதாய மக்களிடமும் வரி வசூல் செய்து கட்டப்பட்ட முப்பிடாதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் தலித் மக்கள் சென்று வழிபட முடியாத நிலைமை பல காலமாக தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் பல கட்ட பேச்சு வார்த்தை நடந்துள்ளது. எனினும், அரசு உரிய கவ னம் செலுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை. இந்நிலையில், கோவில் திருவிழா நெருங்கியது. இச்சூழலில் வெள்ளி யன்று (மார்ச் 6) நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தலித் மக்களும், கோவிலுக்குள் சென்று வழிபடலாம் என்று அரசு அதிகாரிகள் வழிகாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தலித் மக்கள் கோவில் முன்பு பந்தக்கால் நடுவதற்கு முயன்றனர். அப்போது வேறு பிரிவினர் தடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சின்ன கோவிலான்குளம் காவல் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் வழக் குப்பதிவு செய்துள்ளனர். எனினும், திருவிழாவை சுமூகமாக நடத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அரசு தவறி விட்டது.
இந்நிலையில், வெள்ளி யன்று இரவு சங்கரன் கோவிலில் இருந்து தலித் வகுப்பைச் சேர்ந்த கருப்பசாமி, ஈஸ்வரன், பரமசிவம், சுரேஷ் உள்ளிட்டோர் செந்தட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப் போது, வழியில் சாதி ஆதிக்க வெறியர்களால் கருப்பசாமி கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயத்துடன் அவர் தப்பி ஓடினார். அவருக்குப் பின்னால் வந்த ஈஸ்வரன், பரமசிவம், சுரேஷ் ஆகியோர் மீது கடுமையான ஆயுதங்களால் கொடூரமான முறையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈஸ்வரன் (45), பரமசிவம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். சுரேஷ் படுகாயம் அடைந் தார். அவர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தலித் மக்களின் வழி பாட்டு உரிமையை மறுக்கும் விதமாக சாதி ஆதிக்க வெறியர்களால் நடத்தப்பட்டுள்ள இந்த கொடூர படு கொலை நெல்லை மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.
சிபிஎம் கண்டனம்
இந்தப் படுகொலையை கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் வீ.பழனி வெளியிட்டுள்ள அறிக்i கயில், படுகொலையில் ஈடு பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண் டும் என்றும், கோவிலில் வழிபட தலித் மக்களுக்கு உரிய ஏற்பாடு செய்யப் படவேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளார்.
21-ம் நூற்றாண்டிலும் தீண்டாமைக் கொடுமை நீடித்து வருவது வெட்கக் கேடானது என்று குறிப் பிட்டுள்ள அவர், தீண்டாமையை பின்பற்றுவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகள் தயங்குவதாலேயே இது போன்ற கொடூரச் சம்பவங்கள் நடக்கின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் நடந்துள்ள செந்தட்டி கிராமத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டுமென் றும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் வீ.பழனி வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள் பல வடிவங்களில் நீடித்து வருகின்றன. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
செந்தட்டி கிராமத்தில் கோவிலில் வழிபாட்டு உரிமை கோரிய தலித் மக்கள் மீது நடத்தப்பட் டுள்ள தாக்குதலையும், கொடூரப் படுகொலையையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் வன்மையாகக் கண்டித்துள்ளார். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, செயலாளர் எஸ்.கண்ணன் ஆகியோரும் தங்களது அறிக்கையில் இந்தப் படுகொலையை வன்மை யாகக் கண்டித்துள்ளனர்.