Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

க‌ச்ச‌த்‌தீவை ‌‌‌மீ‌ட்கு‌ம் கால‌ம் நெரு‌ங்‌கி ‌வி‌ட்டது: ‌திருமாவளவ‌ன்!

”க‌‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்கு‌ம் கால‌ம் நெரு‌ங்‌கி ‌வி‌‌ட்டது” எ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.

தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நட‌‌ந்த உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌த்‌‌தி‌ல் ப‌ங்கே‌ற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகை‌யி‌ல், ”தி.மு.க. தலைவர் கருணாநிதி சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார். கச்சத்தீவை மீட்கும் காலம் நெருங்கி விட்டது. காஷ்மீரில் நடப்பது மட்டும் எல்லை தாண்டிய பயங்கர வாதம் இல்லை. சிங்கள அரசு தாக்குதல் நடத்துவதும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தான்.

சிங்கள ராணுவத்தின் அத்து மீறல்களால் தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பல்ல இந்திய அரசுக்கும் ஆபத்து தான். இந்த நிலையில் கச்சத்தீவை மீட்பதன் மூலம் தமிழர்களையும் இந்தியர்களையும் பாதுகாக்க முடியும். அதன் அடிப்படையில் தி.மு.க. நடத்தும் உண்ணா விரத போராட்டம் பாராட்டுக் குரியது.

தி.மு.க. எடுக்கிற எல்லா போராட்டத்துக்கும் விடுதலை சிறுத்தை கட்சி ஆதரவு அளிக்கும். இந்த பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்” எ‌ன்று ‌‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.

ஜனநாயக முன்னேற்ற கழக தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் பேசுகை‌யி‌ல், ”‌சி‌றில‌ங்க கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஒரே வழி கச்சத்தீவை மீட்பது தான். அப்போது தான் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். முதலமைச்சர் கருணாநிதி எடுக்கிற எல்லா முடிவுகளுக்கும் அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” எ‌ன்று ஜெக‌த்ர‌ட்ச‌ன் கூ‌றினா‌ர்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் பேசுகை‌யி‌ல், ”மத்தியஅரசு ‌சி‌றில‌ங்காவு‌க்கு ஆயுத உதவி, ராணுவ பயிற்சி அளிக்க கூடாது” என்றார்.

Exit mobile version