Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோவில் நுழைவும் திராவிட இயக்கமும் – வசந்தன்.

தமிழகம் ஏனைய இந்திய மாநிலங்களை விட முற்போக்கான மாநிலம் காரணம் இங்குதான் திராவிட இயக்கம் முளைத்தது. என்கிற வாதங்கள் இன்றளவும் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் அது உண்மைதான் கொடி கட்டிப் பறந்த பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகவும் பண்ணை முதலாளிகளுக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருந்த இடது சாரிகளின் சமூகப் பாத்திரத்தை கையில் எடுத்தது திராவிட இயக்கம். பார்ப்பனரல்லாத உயர்சாதி முற்போக்களார்களால் வழி நடத்தப்பட்ட திராவிட இயக்கம் இன்று அதன் எல்லா முற்போக்குக் கூறுகளையும் இழந்து விட்டது. கல்வி, சமூகம்,கலாசாரத் தளங்களில் ஆதிக்கசாதிகளின் கருத்தியல் எதுவுவோ அதுதான் தமிழகத்தை ஆளும் திராவிட இயக்கங்களின் அரசிலும். திராவிட இயகத்தைப் புரிந்து கொள்ள இன்னொரு சந்தர்ப்பமாக நமக்கு வாய்த்திருப்பது தமிழகமெங்கிலும் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் தலித் மக்களும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாவட்ட நிர்வாகமும்தான்.

தமிழ் மனமும், திராவிட மனமும் இந்து மத எல்லைகளை மீறாத நிலையில் தமிழகத்தில் அவ்வப்போது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்கசாதிகள் கட்டி எழுப்பிய சுவர்கள் நீடித்தே வந்திருக்கிறது. இப்போது திரௌபதி அம்மன் கோவில்கள், அங்காளப்பரமேஸ்வரி ஆலயங்கள் என பெரும்பலான கோவில்களில் தலித்துக்கள் நுழைய அனுமதியில்லை. தலித் மக்களோ தங்களுக்கென்று தனிக் கோவிலைக் கட்டி பெரிய சாதிகளுடன் பிரச்சனை செய்யாமல் வாழும் வரை அதற்குப் பெயர் அமைதி. இந்தியாவின் ஏனைய மாநிலங்களை விட தமிழகம் எங்கு வேறு படுகிறது என்ற கேள்விக்கு இந்த அமைதியே பதில்.

ஆனால் அமைதி குலைத்து வழிபடும் உரிமை எங்களுக்கும் வேண்டும் என்றூ எப்போது தலித் மக்கள் கேட்கிறார்களோ அப்போதே இந்த அமைதி குலைகிறது. திராவிட இயக்கம் என்று சொல்லப்படும் திமுகவுன் உண்மையான முகமும் தெரிகிறது.உத்தபுரம் சுவர் இன்னமும் இடிக்கப்படைவில்லை

. ஒரு செங்கல் அளவுக்கு உடைத்து விட்டு சுவரை இடித்தது போல தலித்துக்களிடமும் சுவர் அப்படித்தானே இருக்கிறது என்பது போல பிள்ளைமாரிடமும் நற்பெயர் எடுத்துக் கொண்டது திமுக, சேலத்தில், திண்டுக்கல்லில், ஈரோட்டில், நமக்கல்லில், திருநெல்வேலியில் என ஒவ்வொரு ஊரிலிலும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமல் ஏராளமான சுவர்கள். இந்த சுவர்களை சமூக நீதியின் அடிப்படையில் இடித்துத் தரை மட்டம் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று வரை ஆட்சியாளர்களுக்கு இல்லை. மாறாக அமைதி, அமைதி நிலவ வேண்டும் அவ்வளவுதான்.

அதாவது நிலவும் ஆதிக்கசாதி வழிப்பாட்டு முறையை தலித்துக்கள் ஏற்றுக் கொண்டு அமைதியாகச் செல்ல வேண்டும் என்பதுதான் ஆளும் வர்க்கங்களின் நிலைப்பாடாக இருக்கிறது. சில இடங்களில் காவல்துறையினர் வேறு வழியில்லாமல் தலித்துக்களை வழிபட அனுமதிக்கிறார்கள் ஆனால் அது முட்கம்பி வேலிகளுக்குள் இருந்து கொண்டு உறவுகளைப் பார்த்து பேசுவது போலதான் இருக்கிறது. தலித்துக்கள் வழிபட வருகிறார்கள் என்று தெரிந்த உடனேயே ஊரைக் காலி செய்து விட்டு பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினர் அனைவருமே ஒன்றாக ஒற்றுமையாகச் சேர்ந்து மலையேறி விடுகிறார்கள், அல்லது தங்களின் ரேஷன் கார்டுகளை திருப்பிக் கொடுக்கிறோம் என்று கிளம்பி விடுகிறார்கள். வழிபாட்டு உரிமையை மறுக்கிறவர்களுக்கு ரேஷன் கார்டே கிடையாது அதை ரத்து செய்து விடுவோம் என்று எச்சரிக்க வேண்டிய அரசு நிர்வாகவோ ரேஷன் கார்டு வேண்டாம் என்று சொல்லும் பெரிய சாதிகளை எப்படியாபது தாஜா செய்து சமாதானப்படுத்தி குஷிப்படுத்துகிறது.திருநெல்வேலி

மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து மலையில் குடியேறிய கிராம மக்கள் 3-வது நாளாக அங்கேயே தங்கினர். இந்நிலையில், பந்தப்புளி கிராமத்தில் வசித்த ஒரு பிரிவு மக்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டனர். கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள பந்தப்புளி கிராமத்தில் கண்ணநல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளது.

பழமை வாய்ந்த இக்கோயில் 8 சமுதாய மக்களுக்குப் பாத்தியப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2000-ம் ஆண்டில் ஒரு பிரிவு மக்கள் இக்கோயிலில் தங்களுக்கு உரிமை உள்ளது எனக் கோரினர். இதனால், இதர பிரிவு மக்களுக்கும், அவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், இது தொடர்பாக சங்கரன்கோவில், மதுரை நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், ஒரு பிரிவினர் செவ்வாய்க்கிழமை கோயில் கொடை விழாவை நடத்துவதாகவும், அதற்கு காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் கூறி இதர பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை காலை குடும்பத்துடன் எட்டிச்சேரி மலையில் குடியேறி அங்குள்ள கோயிலில் தங்கினர். அங்கு மலைக்கனி மனைவி மாரியம்மாள் (25), பெருமாள்சாமி மனைவி ராதா (27), முருகன் மனைவி முருகேஸ்வரி (22), சாமுவேல் மகன் ராமராஜா (50), சுப்பிரமணியன் மகள் அய்யம்மாள் (20) உள்ளிட்ட 5 பேருக்கு திங்கள்கிழமை மாலை உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு கரிவலம்வந்தநல்லூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை சரியானதும் மீண்டும் அவர்கள் மலையில் வந்து தங்கினர்.

ஆபத்தான பகுதியில் மிகவும் கஷ்டத்துடன் இதர பிரிவினர் மலையில் தங்கியுள்ளனர். இருப்பினும் 3-வது நாளாக மலையில் வசிக்கும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்நிலையில்

பந்தப்புளியில் கண்ணநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஒரு பிரிவு மக்கள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு 41 பானைகளில் பொங்கலிட்டனர். பின்னர், மாவிளக்கு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து 3 ஆடுகள், சேவலை பலியிட்டு வழிபட்டனர். காலை சுமார் 9.30 மணியளவில் வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு தங்கள் பகுதிக்குச் சென்றனர். இதையொட்டி டி.ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், எஸ்.பி. ஆஸ்ரா கர்க் தலைமையில், சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சண்முகம், சேரன்மகாதேவி டி.எஸ்.பி. தங்கத்துரை, வட்டாட்சியர் கதிரேசன் மற்றும் காவல் துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்பட 250 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஒரு பிரிவு மக்கள் பொங்கலிடும் வரை கிராமத்தைச் சுற்றி போலீஸôர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

வெளியூரில் இருந்து யாரும் கோயிலுக்குள் புகுந்துவிடாதவாறு சோதனையிடப்பட்டது.

தலித்துக்கள் தங்களின் வழிப்பாட்டுரிமையைப் பேணுவது கூட இங்கே இயல்பாக இல்லை

. போலீஸ் பாதுகாப்புடந்தான் இதைச் செய்தாக வேண்டிய நிலை. போலீஸ் துணையுடன் வழிபட்டு விட்டார்கள். இனி என்ன நடக்கும் பத்து நாள் போலீஸ் பாதுகாப்புக் கொடுத்து விட்டு போய் விடும். மலையேறியவர்கள் திருப்பி வந்து கோவிலுக்கு தீட்டுக் கழிக்க பரிகார பூஜை நடத்தி வழிபாடு நடத்துவார்கள். அந்த வழிபாட்டிற்கு தலித் மக்கள் வரமாட்டார்கள். அதவாது இரு மக்களுமே இங்கே தனித் தனியாக வழிபடுவதுதான் வழிபாட்டு உரிமை என்று தமிழக அரசோ, போலீசோ நமபுகிறது. இதுதான் தமிழகத்தின் எல்லா கோவிலகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனர்கள் செய்ய வேண்டிய காரியத்தை இப்போது பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் தலித் மக்களுக்கு எதிராகச் செய்கிறார்கள். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கேரளத்து நம்பூதிரிகளுக்கும் நாயர்களுக்கும் அடிமைகளாக இருந்த நாடார்களும், கைரேகைப் பதிவுச் சட்டத்தில் அடிமையாக்கப்பட்டிருந்த தேவர்களும், செட்டியார், ரெட்டியார், நாயக்கர் , வெள்ளாளர் என திராவிட இயக்கத்தின் தூண்களாக இருந்த இருக்கிற சாதிகள்தான் இப்போது தலித்துக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கிறார்கள்.

கடந்த நாற்பது வருடங்களாக அதிகாரத்திற்கு வந்த திராட இயக்கம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதிகள் கையில் அதிகாரத்தைக் கொண்டு போய்ச் சேர்த்தது ஆனால் அம்மக்களை அரசியல் ரீதியாக விழிப்பாக்கவில்லை. அதைத்தான் இன்று தமிழகத்தில் தலித் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Exit mobile version