ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸின் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.நாவின் தற்போதைய பேச்சாளர் டொம் ஹோக்லி தெரிவித்துள்ளார்.
கோர்டன் வைஸின் கருத்துக்கள் தனிப்பட்டவை. குறிப்பிட்ட காலப்பகுதியில் நாட்டில் நிலவிய சூழ்நிலைகளின் அடிப்படையில் அவர் கருத்து வெளியிட்டிருக்கலாம் என டொம் ஹோக்லி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், கோர்டன் வைஸ் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து இந்தியா அறிந்திருந்தாகவும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இந்தியாவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் கோர்டன் வைஸ் வலியுறுத்தியிருந்தார்.