Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோபிதாசின் மர்மமரணம் மூடி மறைக்கப்பட்டது:பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் ஒத்துழைப்பு?

gopithasஇலங்கை அரசினால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பிரித்தானியப் பிரசாஉரிமை பெற்ற இலங்கையர்களின் விபரங்கள் தமக்குத் தெரியாது என இலங்கைக்கான பிரித்தானிய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கயில் எங்கெல்லாம் முதலிடலாம், அதற்காக யாரை அதிகாரத்தில் அமர்த்தலாம் என்பதை எல்லாம் விலாவாரியாகத் தெரிந்து வைத்திருக்கும் பிரித்தானிய அரசு தனது சொந்தப் பிரசைகள் குறித்த தகவல்களைத் தெரியாது என்று கூறுவது அவமானகரமானது. ராஜபக்சவைற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி தண்டிக்கப் போகிறோம் என உலகத்தை ஏமாற்றும் பிரித்தானிய அரசிற்கு கைதான தமது பிரசைகள் குறித்த விபரங்களைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருபதாகக் கூறுவது கோமாளித்தனமானது.

கோபிதாஸ் விஸ்வலிங்கம் என்ற பிரித்தானியப் பிரசையைச் சிறையிலடைத்து கொலை செய்துள்ளது இலங்கை அரசு. எழு வருடங்கள் சிறையில்டைத்துக் கொலைசெய்யப்பட்ட கோபிதாஸ் இன் மரணம் சந்தேகத்திற்கு உரியது என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பிரித்தானிய அரசு கோபிதாசின் மீள் பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடவில்லை. அந்த அளவிற்கு இலங்கை அரசுடன் ஒத்துழைப்பது மட்டுமன்றி வெள்ளையர்கள் அல்லாதவர்களைப் புறக்கணிக்கிறது. சுதந்திரமான மீள் பிரேதப் பரிசோதனைக்கு கோபிதாஸ் என்ற தமிழரின் உடலை உட்படுத்தவேண்டும் என்ற குறைந்தபட்சக் கோரிக்கை கூட யாராலும் முன்வைக்கப்படவில்லை. உலகம் முழுவதும் நாசகாரச் சக்திகளாகச் செயற்படும் பிரித்தானிய அரசின் அடிமைகள் போன்றும், உளவாளிகள் போன்றும் செயற்படும் தமிழ் அமைப்புக்கள் இவ்வாறான கோரிக்கையை பிரித்தானிய அரசிடம் முன்வைக்கவில்லை.

சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட இந்தக் குறைந்த பட்ச நடவடிக்கையைக் கூட மேற்கொள்ள முடியாத வியாபாரிகள் தமிழ் அரசியல் தலைமையைக் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

கோபிதாஸ் போன்ற நூற்றுக் கணக்காவர்களை பிரித்தானிய அரசுடன் இணைந்து இலங்கை அரசு கொலை செய்தாலும் இந்த உளவாளி அமைப்புக்கள் மூச்சுக்கூட விடப்போவதில்லை.

பின் காலனியக் காலத்திலிருந்து இலங்கை அரசின் இனவழிப்பிற்கு மட்டுமல்ல அனைத்துப் படுகொலைகளுக்கும் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்துவந்த பிரித்தானிய அரசு இலங்கையில் கல்வித் துறையையும் மருத்துவத் துறையையும் அழிப்பதற்கு நீண்டகாலம் திட்டமிட்டு வந்தது.

ஜெனீவா தீர்மானம் என்ற அமளியில் இலங்கையில் பிரித்தானியப் பல்கலைக் கழக வழாகம் ஒன்று 120 ஏக்கர் நிலத்தில் மிகிரிகம என்ற இடத்தில் திறந்துவைக்கப்பட்டது.

பிரித்தானிய நிறுவனம் இலங்கையில் மருத்துவ முதலீடுகளை மேற்கொள்கிறது. இவற்றிற்கு ராஜபக்ச குடும்பம் மட்டுமல்ல பிரித்தானிய அரசின் தமிழ் உளவாளிகளும் துணை செல்கின்றனர்.

Exit mobile version