இந்த வீடு ஒப்படைக்கப்படுகிற அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை என்பது கருணாநிதியின் தயார் பெயரில் கருணாநிதியால் உருவாக்கபப்ட்டு தனது வாரிசுகளின் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில் கோபாலபுரம் வீட்டை கருணாநிதி தனது வாரிசுகளின் நிர்வாகத்துக்கே விட்டிக்கிறார் என்பது அவரது தியாக சிந்தனையை எடுத்துக் காட்டி நிற்கிறது என்றாலும், ஆறு மாதத்திற்குப் பிறகு இன்று அனைத்து ஊடகவியளார்களையும் அழைத்து வீட்டை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தக் கையெழுத்து சம்பிரதாயங்களை நடத்தினார்கள்.
இன்னும் வீடு ஒப்படைக்கபப்ட வில்லை. எதிர்காலத்தில் மருத்துவமனையாக மாற்றப்பட இருக்கும் கோபாலபுரம் இல்லத்திற்கு கலைஞர் கருணாநிதி மருத்துவமனை என்ற பெயர் சூட்டப்பட இருக்கும் நிலையில், கோபாலபுரம் வீடு வாழத் தகுதியான வீடு இல்லை என்றும் வீட்டின் சுவர்களிலும், தரையிலும் விரிசல் ஏற்பட்டதால் கருணாநிதி கோபாலபுரம் வீட்டிலிருந்து மாறி புதிய வீடு ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறார்ன் என்றும் தமிழகத்தின் பிரபால ஊடகமான ஆனந்த விகடன் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
ஜோதிடர் ஒருவரின் உத்தரவுப் படியே இந்த வீடு தானமாக வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிற நிலையில், வாரிசுப் போட்டியில் இதற்குப் பதிலாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராஜாத்தி அம்மாளும் அவரது மகள் கனிமொழியும் என்கிறார்கள்.