Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோத்தாவும், ஹக்கீமும், புலிசார் அமைப்புக்களும் : முஸ்லீம்களுக்கு எதிராக…

bbs_gotaஇஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக இலங்கையில் செயற்பட்டு வருவதாக இனக்கொலையாளியும் இலங்கையின் பாதுகாப்புச் செயலருமான கோதாபய ராஜபக்ச செயற்பட்டுவருவதாக் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். பொது பல சேனா போன்ற பௌத்த பயங்கரவாத அமைப்புக்களை உருவாக்கி தமிழ்ப் பேசும் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதத்திஅ வளர்க்கும் இலங்கை அரச பாசிசமும் அதன் சூத்திரதாரியான கோத்தாபய ராஜபக்சவும் இலங்கையில் இன்னொரு இரதக்களரியைத் திட்டமிட்டு வருகின்றனர்.

இலங்கையில் முஸ்லிம் தமிழர்களின் வாக்குப் பொறுக்கும் தலமைகளோ இலங்கை அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளையும் சலுகைகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ்கின்றன. இந்த நிலையில் தவிர்க்க முடியாமல் தமது வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த அரசியல் வாதிகள் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துக்களைக் கூட இலங்கை அரச பாசிஸ்டுக்கள் எதிர்க்கின்றனர்.

இலங்கை இனக்கொலை அரசில் நீதி அமைச்சர் பதவி வகிக்கும் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ரவூப் ஹக்கீம் கோத்தாபயவின் பௌத்த பயங்கரவாதக் கருத்துக்களுக்கு ஆங்காங்கு எதிர்ப்புத் தெரிவித்த போது அதற்கு எதிராக கோத்தாபய பொங்கி எழுந்துள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் கள நிலைமைகளை அறிந்து கொள்ளாது, கண்மூடித் தனமாக கருத்து வெளியிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். கடும்போக்குவாதம் காரணமாக உலகமே இன்று பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடும்போக்குவாதத்தை கட்டுப்படுத்த நாம் பல நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலனாய்வுப் பிரிவு, சுங்கப்பிரிவு, விமான நிலைய பாதுகாப்பு போன்றவற்றின் காரணமாக கடும்போக்குவாதத்தை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வடகிழக்குத் தமிழர்களைப் போன்று தனித்துவமான தேசிய இனமான முஸ்லிம்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பைத் நிறுவனமயப்படுதிவரும் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் ஆட்சி நடத்துவதற்கு இது அவசியமானதாகிறது.
மறுபுறத்தில் முஸ்லிம்களைத் தனியான தேசிய இனமாகவும் அவர்களின் சுய நிர்ணய உரிமையையும் அங்கிகரிக்க மறுக்கும் புலி சார் அமைப்புக்கள் முஸ்லிம்களைத் தம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றன. முஸ்லிம் தமிழர்களை இலங்கை அரசைப் போன்றே தனியான தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் அப்பட்டமான பாசிசக் கருத்துக்களைக் கொண்ட இவர்கள் தம்மை ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்று அழைத்துக்க்கொள்வது அத்தேசிய இனத்தின் அவமானம்.

Exit mobile version