Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோத்தாபய தனிப்படையின் சர்வதேசப் பயங்கரவாதத்தின் பின்னணியில்

ship_wepons_colombo1இலங்கையில் தனியார் பாதுகாப்பு நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள Avant Garde Security Services (Pvt) Ltd என்ற தனியார் இராணுவ நிறுவனத்தின் துணை நிறுவனம் அவன்கார் மரிரைம். 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம் 2012 ஜனவரிக்கு உள்ளாகவே சிசெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளுல் தனது துணை உருவாக்கிக் கொள்கிறது.

இன்று உலகின் பல நாடுகளிலும் நிறுவனம் வியாபித்துள்ளது.

தாய் நிறுவனமான அவன்கார் சேக்கியுரிடி சேர்விசஸ் கடந்த 17 வருடங்களாக இலங்கையில்

இலங்கையில் ஆரம்பித்து உலகில் வியாபித்துள்ள அவன்கார்ட் மரிரைம்

இயங்கி வருகிறது. இலங்கையில் 6500 பேர் இந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.

இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரத்தின் கீழ் ஜுன் 1ம் திகதி பதிவு செய்யப்பட இந்த நிறுவனம் சர்வதேச தனியார் பாதுகாப்பு வழங்குனர்களுக்கான குறியீட்டு எண்ணை சுவிஸ் நாட்டின் அரச அங்கீகாரத்தின் கீழ் பெற்றுக்கொண்டது. சுவிஸ் அரசு சர்வதேசப் பாதுகாப்பு நிறுவனமாக அங்கீகரித்ததைத் தொடர்ந்தே அவன்கார் மரிரைம் தனது கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை சர்வதேசச் சட்டங்களுக்கு அமைய ஆரம்பித்தது.

நிறுவனத்தின் யாப்பின் அடிப்படையில் இலங்கை அரசு சர்வதேசக் கடல் பரப்பிற்கான பாதுகாப்பை இந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மகாநுவர கப்பல்

தவிர, அவன்கார் மரிரைம் இற்கு சொந்தமான ஆயுதங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று அபுதாபியில் 2012 ஆம் ஆண்டு தரித்து நின்றதாகக் கூறப்பட்டது.

அவன்கார் மரிரைம் இன் கப்பலான மகா நுவர என்ற கப்பல் இன்று கொழும்பில் இலங்கைப் போலிஸ் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அட்வென்ட்போர்ட் என்ற தனியார் இராணுவ நிறுவனத்திற்கு எதிராக அவன்கார் மரிரைம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அட்வென்ட்போர்ட் என்ற அமெரிக்க நிறுவனம் கொழும்பில் தரித்து நிற்க அனுமதிக்கப்பட்டிருந்த மகா நுவர என்ற ஆயுதக் களஞ்சியத்திலிருந்து அவன்போர்ட்டின் சட்ட விரோத நகர்வுகள் அவதானிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியிருந்தது. இது நடந்தது கடந்த வருடத்தில்.

ஆக, முன்னைய அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான அமைச்சர்களுக்கு அவன்கார் மரிரைம் குறித்து பாடம் கற்பிக்க வேண்டிய தேவைகள் இல்லை. குறிப்பாக மீன்பிடி அமைச்சராகவிருந்த ராஜித சேனாரத்ன இன்று மைத்திரி அரசிலும் அமைச்சர்.
அவன்கார் மரிரைம் குறைந்தது ஐந்து கப்பல்கள் நிரம்பிய ஆயுதங்களை வைத்திருக்கலாம் என தகவல்கள் கிடைக்கின்றன.

வெளி நாட்டவர்களுடன் சோதனையிடப்பட்ட மகாநுவர கப்பல்

இன்று அண்ணளவாக 3000 ஆயுதங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இன்று இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய கப்பலில் சில வெளி நாட்டவர்களும் தங்கியிருத்தனர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவில்லை. இன்றைய இலங்கை அரசு அவன்கார் மரிரைம் என்ற நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமானால், அந்த நிறுவனத்தை உடனடியாக மூட வேண்டும். சட்டவிரோத ஆயுத பேரங்கள் தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக பிரித்தானிய அரசின் அனுமதியோடு பெற்றுக்கொண்ட ஆயுதங்கள், சுவிஸ் அரசின் அங்கீகாரம் உட்பட பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

கோட்டாபயவின் கொலைப்படை ஆயுதங்களுக்குத் தடை :தொடரும் ஏனைய நிறுவனங்கள்
உலகமயமாகும் கோத்தாவின் கொலைப்படைகள் : நிவேதா நேசன்
Exit mobile version