Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோத்தாபய இந்தியாவில் : இறுகும் இராணுவ முடிச்சு

gotabaya-rajapaksa-genocideஇலங்கையின் இனக்கொலையைத் திட்டமிட்டுத் தலைமை தாங்கியவரும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவருமான இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று இந்திய பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். லங்கா ஹொஸ்பிரடல்ஸ், லங்கா லொஜிஸ்டிக் ஆகிய தனியார் நிறுவனங்களின் உரிமையாளரான கோத்தாபய ராஜபக்ச இலங்கையை மையமாகக் கொண்டு ரக்ண ஆகாஷ லங்கா மற்றும் அவன்கார் மரிரைம்ஸ் என்ற தனியார் இராணுவ நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

1992 ஆம் ஆண்டு இராணுவதிலிருந்து வெளியேறிய கோத்தாபய ராஜபக்ச ஒரு வருடங்களின் பின்னர் அமெரிக்க அரசின் கிரீன் கார்ட் லொட்டரி மூலம் அமெரிக்கா செல்லத் தெரிவாகிறார். 1972 இல் இராணுவத்தில் இணைந்த போது இலங்கை இராணுவத்தின் சிக்னல் பிரிவின் கட்டளைத் தளபதியாகப் பதவியேற்றார். இலங்கையின் மூன்று ஜனாதிபதிகளிடமிருந்து தொடர்ச்சியான விருதுகளைப் பெற்ற கோத்தாபய யாழ்ப்பணத்தில் நடைபெற்ற பல இராணுவப் பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்காற்றினார்.

இறுதியாக இனப்படுகொலைத் திட்டத்துடன் இலங்கை வருவதற்கு முன்னர் அமெரிக்காவில் லொயலா கல்லூரியில் யூனிக்ஸ் தகவல் தொழில் நுட்பத்தில் வேலை பார்த்தாகக் கூறப்படுகிறது. 1994 இற்கும் 2006 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கோத்தாபயவின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அமெரிக்காவில் இராணுவப் உளவு மற்றும் திட்டமிடலில் பயிற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன. கடந்த வருடம் அமெரிக்க இராணுவப் பயிற்சித் தளபதிகளுடன் விருந்து வைபவம் ஒன்றில் கலந்துகொண்டமை சந்தேகங்களை மேலும் வலுவாக்கியது.
நோர்வே அரசின் நிதி வழங்கலில் இயங்கும் தன்னார்வ நிறுவனமும் கோத்தாபய ராஜபக்சவும் இணைந்தேபொது பல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பை தோற்றுவித்தனர்.

இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழிப்பதற்கும் இராணுவப் பயங்கரவாதத்தை தெற்காசியாவில் கட்டவிழ்த்து விடுவதற்கும் தயார் செய்யப்பட்ட கோத்தாபய ராஜபக்ச இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லியை பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே.மத்தூர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நோர்வே அரசின் நிதி வழங்கலில் இயங்கும் தன்னார்வ நிறுவனமும் கோத்தாபய ராஜபக்சவும் இணைந்தே பொது பல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பை தோற்றுவித்தனர்.
ஆர்.கே.மத்தூர் இலங்கைக்குச் சென்று கோத்தாபாயவைச் சந்தித்த 10 நாட்களின் பின்னர் நடைபெற்ற இச் சந்திப்பு பல்வேறு ஐயங்களைத் தெரிவிக்கிறது. நாளை மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர் மொகமெட் நசீம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

Exit mobile version