Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோத்தாபயவை அம்பலப்படுத்திய நிமால்கா தனது எஜமானர்களை மறந்துவிட்டார்

Nimalka Fernando_inioruசர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இலங்கையின் சில அரசசார்பற்ற அமைப்புகள் ஒன்றுசேர்ந்து வன்னிப்போரின் இறுதிதருணங்களில் நிகழ்ந்தவை குறித்த புதியகதைகளை முன்வைப்பதாக மனிதஉரிமை பணியாளர் நிமல்கா பெர்ணாண்டோ குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த அமைப்புகள் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மனிதஉரிமை பாதுகாவலர் சுனிலா அபயசேகர நினைவுப்பேரூரையை நேற்று கொழும்பில் ஆற்றிய வேளையே அவர் இதனை தெரிவித்தார்.

அண்மையில் மார்கா அமைப்பும், இலங்கையின் மனித நேயஅமைப்புகளின் கூட்டமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

மார்காவின் இந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல கோத்தாபயவின் பின்புலமும் சந்தேகமின்றி காணப்படுகிறது. ஆனல் இந்த நிறுவனம் 1972 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க நிதியில் இயங்கிவருகிறது என்பதை நிமால்க பர்னாண்டோ தற்செயலாக மறந்துவிடவில்லை. ஏகாதிபத்திய நிதியில் தான் நிமால்காவின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version