Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோத்தாபயவைக் கைதுசெய்ய ரனில் தடைவிதித்தார் : புதிய அரசின் பழைய முகம்

Ranil-Gotaமுன்னை நாள் பாதுக்காப்புச் செயலாளரும் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவருமான கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் முயன்ற வேளையில் இலங்கையின் இன்றைய பிரதமர் ரனில் விக்ரமசிங்க தடுத்து நிறுத்தினார் என கொழும்பு ரெலிகிராப் என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ரக்ன ஆகாச லங்கா என்ற அரச இராணுவ நிறுவனமும் அவன்கார்ட் மரிரைம் என்ற கோத்தாபயவின் பினாமிகளால் இயக்கப்படும் தனியார் ஆயுத நிறுவனமும் கூட்டாக வைத்திருந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பகவே கோத்தாபயவைக் கைது செய்யவேண்டிய நிலை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஏற்பட்டது. கோத்தாபய கைது செய்யப்பட்டால் தனது அரசிற்குச் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் அவரை வேறு வழிகளில் விசாரணை செய்யுமாறு ரனில் கூறியுள்ளார்.

அரச ஆயுதங்களை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியமை சட்டவிரோதமானது என்ற அடிபடையில்யே இலங்கை மத்திய உளவு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. அவன்கார்ட் மரிரைம் என்ற நிறுவனம் சோமாலியக் கடற்கொள்ளையர்களிடமிருந்து பெரும் வணிக நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
பிரித்தனிய அரசு இலங்கை அரசிற்கு 2012 ஆம் ஆண்டு ஆயுதங்களை வழங்கியது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய போது கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கவே ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே வேளை பிரித்தனிய அரசின் அடியாள் போன்று தனது அரசியல் காலம் முழுவதும் செயற்படும் ரனில் விக்ரமசிங்க கோத்த்தாபயவையும் மகிந்தவையும் பாதுகாக்க விரும்புவதன் பின்னணியில் பிரித்தானியா உட்பட்ட ஏகாதிபத்திய நாடுகளின் பங்கும் உள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றன.

ராஜபக்ச குடும்பம் பாதுகாப்புடன் வாழ்வதற்கும் தேவையானால் அரசியலுக்குத் திரும்புவதற்கும் பிரித்தானியா அமெரிக்கா உட்பட்ட ஏகாதிபத்திய நாடுகள் உதவி வருகின்றன என்பது தெளிவாகின்றது. அதே வேளை ராஜபக்சவின் பேரினவாத அரசியலைப் பாதுகப்பதற்கு சில புலம்பெயர் அமைப்புக்களும் துணை செல்கின்றனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.

உலகமயமாகும் கோத்தாவின் கொலைப்படைகள் : நிவேதா நேசன்
Exit mobile version