தனக்கு வழங்கப்பட்டுள்ள பதவி என்ன என்பதை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாது செயற்படும் பாதுகாப்புச் செயலாளர் கோத்த
அரச அதிகாரியான கோட்டாபய எந்த அதிகாரத்தின் அடிப்படையில் மாணவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை நடத்தினாலும், புனர்வாழ்வுக்கு உத்தரவிடும் அதிகாரம் அவருக்கில்லை. கோத்தபாயவின் இந்தச் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அத்துடன், மாணவர்கள் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம். அன்று கல்வியில் பாகுபாடு காட்டியதால்தான் நாட்டில் போர் ஏற்பட்டது. எனவே, அரசு மாணவர் சமூகத்துடன் விளையாட முற்படக்கூடாது எனத் தெரிவித்தார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.