Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோத்தாபயவின் கொலைப்படைகளைச் சட்டரீதியாக்கியுள்ள மைத்திரி அரசு

gottaஇன்று வெளியான வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் கோத்தாபயவினால் ஆரம்பிக்கப்பட்ட ரக்ண ஆகாஷ லங்கா என்ற ராஜபக்ச அரசின் தனியார் நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் உப நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, அவன்கார்ட் செக்கியூரிட்டி சேர்விசஸ் என்ற நிறுவனத்தின் உப நிறுவனமான கோத்தாபயவின் கடற்பாதுகாப்பு நிறுவனம் சட்டத்திற்கு உட்பட்டதே என புதிய பாதுக்கப்புச் செயலாளர் அறிவித்துள்ளார்.

புதிய மைத்திரியின் அரசு கோத்தாபயவின் இராணுவப் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியை ஆட்சிக்குவந்து பத்து நாட்களிலேயே உள்வாங்கியுள்ளது.

அவன்கார்ட் மரிரைம் இன் கப்பல் தொடர்பாக புதிய  பாதுகாப்புச் செயலாளர் யூ.டி பஸ்நாயக்க  தெரிவிக்கையில், காலியில் அண்மையில் மீட்கப்பட்ட ஆயுதக் களஞ்சியக் கப்பல் சட்ட ரீதியானதே என  தெரிவித்துள்ளார்.

காலியில் நங்கூரமிட்டிருந்த மஹநுவர என்ற கப்பலில் பெருந்தொகையான துப்பாக்கிகளும் தோட்டாக்களும் மீட்கப்பட்டிருந்தன.
சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் தற்போது இந்த ஆயுதக் களஞ்சியம் அடங்கிய கப்பல் சட்ட ரீதியானது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 3000த்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் லட்சக் கணக்கான தோட்டாக்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானது என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
காலி துறைமுகத்திலிருந்து ஏழு கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருந்தது.
சோமாலிய கடற் கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாக்கும் பணிகளுக்காக இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பற்றிய விபரங்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டள்ளது.
எனவே இந்த ஆயுதக் களஞ்சியம் அடங்கிய கப்பல் சட்டவிரோதமான முறையில் நங்கூரமிடப்பட்டிருக்கவில்லை என பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்

அவன்கார்ட் மரிரைம் தொடர்பான மேலதிக தகவல்கள்:

கோட்டாபயவின் கொலைப்படை ஆயுதங்களுக்குத் தடை :தொடரும் ஏனைய நிறுவனங்கள்
கோத்தாபய தனிப்படையின் சர்வதேசப் பயங்கரவாதத்தின் பின்னணியில்
உலகமயமாகும் கோத்தாவின் கொலைப்படைகள் : நிவேதா நேசன்

பாதுகாப்பு அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலின் இன்றைய பிரதி இணைப்பு:

Ministries’ gazzette

Exit mobile version