இதேவேளை, இராணுவத்தின் செயலாளராக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் எஸ்.ரணசிங்க, கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதியாகவும், இராணுவத்தின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் டி.ஏ.கருணாசேகரவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதேசமயம் பிரிகேடியர் தரமுடைய ஐந்து இராணுவ அதிகாரிகளுக்கும் அடுத்த வருடத்திலிருந்து இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. இராணுவ தலைமையகத்தின் இராணுவ உதவி நிதிக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் சி.கே.ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதிமுதல் வடக்கின் முன்னோக்கிய பரமாரிப்பு பிரிவின் கட்டளை அதிகாரியாக பதவிமாற்றம் பெற்றுள்ளார்.
மகிந்த குடும்பத்தின் தனியார் இராணுவமாகவும் உலக அளவில் கொலைப்படையாகவும் செயற்பட்டுவரும் இலங்கை இராணுவம் தெற்காசியாவில் அரச பயங்கரவாததின் தங்குமடம் போன்று செயற்படுகிறது. நேற்று பேரதனிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கோத்தாபயவின் தனியார் இராணுவத்தால் மிரட்டப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் வடகிழக்கின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் கோத்தாவின் தனியார் இராணுவத்தால் திட்டமிடப்படலாம் என்|ற சந்தேகங்கள் எழுகின்றன.