சமீப காலமாக கிறீஸ் மனிதர்கள் விவகாரம் தொடர்பாக பொதுமக்களும் பொலிஸாரும் தாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். ஊறணிப் பகுதியில் யானைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளை கிறிஸ் பூதங்கள் என்று தவறாக நினைத்துக் கொண்ட கிராமமக்கள் தாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கிறீஸ் மனிதர்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் குறித்தே கோதாபய இவ்வாறான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இலங்கை சர்வாதிகார அரசிற்கு எதிரான மக்கள் போராட்டங்களை நெறிப்படுத்தவும், அவற்றை அரசிற்கு எதிரான எழுச்சியாக மாற்றவும் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் முன்வராத நிலையில் சர்வாதிகாரியும் போர்க்குற்றவாளியுமான கோதாபாயவின் இந்த எச்சரிக்கை இலங்கை அரசியலின் அவலநிலையைக் காட்டுகிறது.
தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் நடைபெறும் இவ்வாறான தாக்குதல்களில் இலங்கை உளவுத்துறையின் பங்களிப்பு இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.