இதற்கு முன்னதாக படைப் புலனாய்வாளர்கள் ‘வெள்ளை வான்‘ களை கொண்டு பீதியூட்டி வந்தனர். தற்போது கிறீஸ்பேய்களைக் கொண்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றனர் என அவர் கூறினார்.
பொதுமக்களால் கிறீஸ் பேய்கள் என்று பிடிக்கப்பட்டவர்கள் அனைவருமே இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களில் பலரும் தம்மை படையினர் என்று அடையாளம் காட்டியதும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராமங்கள் தோறும் படைமுகாம்களை நிறுவுவதற்காகவே கோத்தாபய ராஜபக்ச இவ்வாறு செயற்படுவதாக மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்தப் பிரச்சினையை காரணம் காட்டி கிழக்குப் பகுதிக்கு 5000 படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.