Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோதாபயவின் கோரிக்கையை பிரித்தானியா நிராகரித்தது

ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை என்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் தெரிவித்துள்ளது. பொறுப்பற்ற காணொளியை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சனல் 4 ஒரு சுதந்திரமான ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஊடகம். ஒவ்வொரு ஜனநாயகத்திலும் சுதந்திர ஊடகம் முக்கியமானது என்று பிரித்தானியா நம்புகிறது.

ஊடக நிறுவனங்கள் பொருத்தமான ஒழுக்க மற்றும் சட்ட ரீதியான தராதரங்களை பேணுவதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான பொறிமுறையை பிரித்தானியா கொண்டுள்ளது.

ஆனால் ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை” என்றும் பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version