கோதபாய துப்பாக்கி முனையில் மிரட்டினாரா ? – பதிலுக்கு கரின் வென்கர் நாடுகடத்தல்
இனியொரு...
சுவிட்சிலாந்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான கரின் வென்கர் இலங்கை அரசாங்கத்தினால் நாடுகடத்தப்பைவ்ரட்டுள்ளார். இவரை நாடுகடத்தியத்தற்கான காரணங்கள் எதனையும் இலங்கை அர்சாங்கம் வெளியிடவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று இலங்கை அரசு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், இவர் கேட்ட கேள்விகள் தொடர்பாகவே கரின் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என தெரியவருகிறது. தேர்தல் முடிபுகள் வெளியான போது தேர்தல் ஆணையாளரைத் துப்பாக்கி முனையில் கோதபாய ராஜபக்ச மிரட்டி முடிபுகளை வெளியிடுமாறு நிர்ப்பந்தித்தது உண்மையா என்று கரின் கேட்ட கேள்விக்கு இலங்கை அரச அதிகாரி ஒருவர் அவ்வேளையில் கோதபாய உறங்கிக்கொண்டு இருந்தார் எனப் பதிலளித்தார்.
மறு நாளே கரின் வென்கருக்கு நாட்டைவிட்டு வெளியேறுமாறு குடிவரவுத் திணைக்களத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
30 வயதுடைய கரின் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சுவிஸ் பொது வானொலிச் சேவையின் ஜேர்மன் பிரிவிற்கு செய்திவ வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.