கோட்டாபயவும் அவரது சகோதரரான மகிந்தவும் நாட்டில் இல்லாத வேளையில் நடத்தப்பட்ட இத் தாக்குதல்களை இலங்கை அரசு இதுவரை கண்டிக்கக்கூட இல்லை. சோரம்போகும் முஸ்லிம் தலைமைகள் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்படும் தமது சமூகத்தின் மீதான தாக்குதல்களை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கின்றன.
கடந்த காலங்களில் ஏனைய தமிழ்ப் பேசும் சிறுபான்மையினருக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டும் நோக்குடன் செயற்பட்டுவந்த இத் தலைமைகள் பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றன.
இந்த நிலையில்,, அளுத்கம சம்பவம் தொடர்பில் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தேசிய சமாதான முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள முஸ்லிம் தமிழர்கள் செயற்பட வேண்டிய காலத்தைத் தவறவிட்டால் இனப்படுகொலையில் அழிந்துபோவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.