அவர் நேற்று வெள்ளிக்கிழமை அங்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தார். மக்களுடன் அளவளாவினார்.
உடுத்த உடையுடன் முகாமிற்கு வந்த இப்பெண்கள் கடந்த 3 நாட்களாக அதே உடுப்புடன் காலத்தைக் கடத்தி வருகின்றனர்.
மேலும் 10 வயதுக்குட்பட்ட 27 சிறுமிகளுக்கும் மாற்றுடையில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
ஒரு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் பெண்களுக்கு தேவையான சுகாதார ரீதியான உடைகள் மற்றும் பொருட்களை பிரதேச செயலகத்திடம் கையளித்துள்ளதாகவும் அவை இதுவரை பகிர்ந்தளிக்கப்படவில்லையென்றும் தெரியவருகிறது.
அவை முகாமிலுள்ள ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
மலசல கூடங்களிருந்தாலும் தண்ணீர் வசதி இல்லையென்றும் கூறப்படுகிறது. பொதுவாக முகாம் நிருவாகம் பாதிக்கப்பட்டவர்கள் நலன்கருதி செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்கிறது.
ஸ்ரீகாந் மேலும் தெரிவிக்கையில், நாம் இங்குள்ள நிலைமைகளை அவதானித்துவிட்டு கிழக்கிற்குச் சென்று தேவையான நிவாரணப் பொருட்களுடன் மீண்டும் இங்கு வந்து வழங்க விருக்கிறோம் என்றார்.