Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொஸ்லாந்தவில் இலங்கை அரசின் படுகொலைகள்

badhulaமலையகத்தில் பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில்  பிரதேசத்தில் நேற்றுக்காலை ஏற்பட்ட மண்சரிவில் 450 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அரசு தெரிவிக்கிறது. இவ்வாறான ஒரு மனிதப் பேரவலம் இலங்கை என்ற சிறிய நாட்டில் நடைபெற்ற போதும் இலங்கை அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை.

மீரியபெத்தையில் ஆற்று பள்ளத்தாக்கை அண்மித்தாக உள்ள 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன்குடியிருப்புக்களே மண்ணில் புதையுண்டுள்ளன.

இதேவேளை பால் சேகரிக்கும் நிலையங்கள் இரண்டு வாகனங்கள் திருத்தும் இடம் இரண்டு கடைகள் மருத்துவமாது குடும்பம் தங்கியிருந்த விடுதி சாரதியின் வீடு சிகிச்சை நிலையம் மற்றும் கோவில் ஆகியனவும் மண்ணில் புதையுண்டுள்ளன.

இவ்வாறன சம்பவங்கள் நடைபெறும் முன்னரே உலகின் பல வறிய நாடுகள் கூட மக்களுக்கு முன்னறிவித்த செய்கின்றன. வன்னியில் மனிதப்படுகொலைகளை நடத்திவிட்டு ஆசியில் அமர்ந்திருக்கும் கொஸ்கந்தவில் கொல்லப்பட்ட 450 மனிதர்கள் பெரிய தொகை கிடையாது.
இப்பிரதேசம் மக்கள் குடியிருப்பிற்கு உகந்ததல்ல என 2005 ஆம் ஆண்டு முதலே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் மக்களுக்கு இது தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தவோ அவர்களை மீள் குடியேற்றும் வசதிகளயோ அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

கொஸ்கந்தவில் நடைபெற்றது இயற்கை அனர்த்தம் அல்ல; படுகொலைகள்.

இன்று மீட்புப்ப் பணிகளைத் தீவிரப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆக, கடந்த 24 மணி நேரத்தில் மீட்புப் பணிக்கு என்ன நடைபெற்றது? இடிபாடுகளில் எஞ்சியிருக்கும் மலையகத் தொழிலாளர்களையும் கொலைசெய்வதா அரசின் நோக்கம்?

Exit mobile version