
கொழும்பில் ஆளும் கட்சிக் கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேதின நிகழ்வுகள் பன்கீ மூன் நிகழ்வுகளாகவே காணப்பட்டது. பன் கீ மூன் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றிற்கு எதிரான சுலோகங்களே முன்வைக்கப்பட்டன. பௌத்த விகாரைகளும் பௌத்த பிக்குகளும் பங்கெடுத்துக் கொண்டார்கள். தவிர, வடக்கிலிருந்து ஈ.பி.டி.பி அமைப்பினரால பிடித்துவரப்பட்ட தமிழர்களும் பெருமளவு ஊர்வலத்தில் பங்கெடுத்தனர். அரச ஊடாங்களில் தாம் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாகத் திட்டமிட்டபடி தமிழர்கள் சிலர் கூறியதையும் காணக்கூடியதாக இருந்தது.