அங்கு குழுமியிருந்த இலங்கை பயங்கரவாத போலிஸ் படை பௌத்த துறவிகளின் தாக்குதல்களுக்கு உற்சாகமூட்டியதாகத் ரஸ்மீன் மௌலவி என்ற இஸ்லாமிய மதகுரு தெரிவித்ததாக இணைச் செய்தி ஒன்று கூறுகிறது.
மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் வன்னிப் படுகொலைகளின் சூத்திரதாரிகளில் முக்கியமானவருமான கோத்தாபய ராஜபக்சவின் வழிகாட்டலில் இயங்கும் ராவன பலயா குழுவைச் சேர்ந்தபௌத்த துறவிகளே இத் தாக்குதலை நடத்தியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
ராவன பலயா குழுவினர் போதுபல சேனா அமைப்பின் இணைந்து செயற்படுகின்றனர். இந்த இரு குழுக்களும் இணைந்து அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தன.
இலங்கை பயங்கரவாத அரசின் துணைப் பயங்கரவாதக் குழுக்கள் இலங்கையில் முஸ்லீம்கள் மீதான இன வன்முறையைக் கட்டவிழ்த்துவிடத் தயாராகிவருவதாக சந்தேகிக்கப்படுகிறது. சிங்கள மக்கள் மத்தியிலிருந்து உருவாகும் போராட்டங்களைத் திசைதிருப்ப தாமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான வன்முறை இலங்கை அரசுக்கு அவசியமாகிறது.
சிங்கள பௌத்த அரச பயங்கரவாதிகளே சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்னய உரிமைக்கான போராட்டத்தை வளர்க்கின்றன.