Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொழும்பு சென்றுள்ள நடிகர் நடிகைகளுக்கு எச்சரிக்கை.

iifa  என்னும் இந்தியத் திரைப்பட விழா கொழும்பில் இன்று துவங்குகிறது. இந்த விழாவை பாலிவுட் நட்சத்திர பிரபலங்கள் பலரும் புறக்கணித்துள்ள நிலையில் ஜாண் ஆப்ரஹாம், பிபாஷா பாசு, ஜெனீலியா . சலமான்கான் , ஷில்பா ஷெட்டி, ப்ரியங்கா சோபரா போன்ற நடிக நடிகைகள் பணத்துக்காக பேரம் பேசம் பட்டு கொழும்பு சென்றுள்ளனர். இது தொடர்பான அதிருப்தி தமிழகத்தில் எழுந்திருக்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் திரையுலகினைச் சார்ந்த எவரும் இவ்விழாவுக்குச் சென்றதாக இது வரைத் தகவல் இல்லை. இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் எல்.சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் நேற்று மும்பையில் திரைப்பட மற்றும் டி.வி. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் மன்மோகன் ஷெட்டி, யாஷ் சோப்ரா, ரமேஷ் சிப்பி, கொழும்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கும் விஸ்கிராப்ட் நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து, கொழும்பு பட விழாவை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர் எல்.சுரேஷ் கூறுகையில், “கொழும்பு விருது விழாவில் பங்கேற்கும் பாலிவுட் நடிகர், நடிகைகளின் படங்களை தென்னிந்தியாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம். இந்தி டைரக்டர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம்என்று எச்சரிக்கை விடுத்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் எதிர்ப்பையும் மீறீ கொழும்பு சென்றுள்ள நட்சத்திரங்களுக்கு எதிரான தடை தென்னிந்தியாவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கபப்டுகிறது. இந்நிலையில் கொழும்பு திரைவிழாவுக்கு எதிராக போராடிய இனக்கொலைக்கு எதிரான குழுக்களை மத்திய மாநில அரசுகள் அச்சுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version