Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொழும்பில் மிதக்கும் வியாபார மையம் மாபியக்களின் கைகளில்

Mafiaபல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கும் அவை சார்ந்தவர்களுக்கும் சேவையாற்றும் நகரமாகக் கொழும்பு மாற்றப்படுகின்றது. அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் நடைபெறும் பல்தேசிய வர்த்தக வியாபார நிறுவனங்களின் சுரண்டலுக்காகவே வீதிகளும் ஆடம்பர விடுதிகளும் நிர்மாணிக்கப்படுகின்றன. பல்தேசியக் கொள்ளையர்களின் வசதிக்காக ஐந்து நட்சத்திர விடுதிகள், பாலியல் தொழில், கசினோக்கள், கொண்டோ கட்டடங்கள் போன்றன நிர்மாணிக்கப்படுகின்றன. தெற்காசியாவின் திருட்டுப்பணத்தைப் பதுக்கும் சொர்க்க புரியாக மாறும் கொழும்பில் அவற்றைப் பாதுகாப்பதற்கென இராணுவ அடியாள் படை, ரக்ன ஆகாச லங்கா என்ற பெயரில் கோத்தாபயவினால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தனியார் இராணுவம் இந்துச்முத்திர வியாபாரப் பயணத்தின் பாதுகாப்புச் சேவையையும் நடத்திவருகிறது.

கொழும்பின் நிழல் உலக மாபியாக்கள் தனியார் இராணுவம் உட்பட பல்வேறு உப சேவைகளைப் பொறுப்பெடுத்துள்ளன.

கடந்த திங்களன்று கொழும்பில் மிதக்கும் வியாபாரச் மையம் ஒன்று அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது. இந்த வியாபார மையம் வழமை போல நிழல் உலக மாபியாக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மிதக்கும் வியாபார மையத்திலுள்ள நிஸ்டா கபே என்ற உணவகம் ரஞ்சித் என்ற நிழல் உலக மாபியா ஒருவரின் பினாமிப் பெயரில் கொழும்பு வட்டார பொலிஸ் அதிகாரி அனுரா சேனநாயக்க 15 மில்லியன் ரூபாய்களுக்கு கொள்வனவு செய்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜபக்ச குடும்பம், நிழல் உலக மாபியாக்கள், இராணுவ அதிகாரம் என்பவற்றின் நச்சுக் கலவையாக முழு இலங்கையும் மாற்றமடையும் மறுபக்கத்தில் வறுமையினால் தற்கொலை செய்துகொள்ளும் விகிதாசாரம் இலங்கையில் அதிகரித்துள்ளது.

Exit mobile version