Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

கொழும்பில்  இன்று காலை சேர்ச் ஒன்றின் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
.
புனித ஆன்ஸ் சர்ச் அருகே விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தன்னை தானே வெடிக்கச் செய்து கொண்டு இந்த தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், ஏராளமானோர் படுகாயம் அடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் ரகாமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருப்பதாகவும், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டிருப்பதாகவும்

இலங்கையின் வடக்கு பகுதியில் ராணுவத்தின் தாக்குதலில் கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக இலங்கை தலைநகர் கொழும்புவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Exit mobile version