Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொழும்பில் சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சுட்டுப் படுகொலை.

08.01.2009.

இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்று முற்பகல் 10.30 மணியளவில் அத்திடிய, பேக்கரி சந்திப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த லசந்த விக்ரமதுங்கவை மோட்டார் சைக்கிளில் வழிமறித்த இரு துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதில் படுகாயமடைந்த லசந்த கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடனடி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர்கள் குழு அவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு சில மணிநேரம் போராடியிருந்தனர்.
அவரின் உடலில் சிறிதளவு இருதயத் துடிப்பு உணரப்பட்டபோதும், சிகிச்சை பயனின்றி 2.15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இருந்து பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரும் “மோர்ணிங் லீடர்” வார ஏட்டின் ஆசிரியராகவும் லசந்த விக்கிரதுங்க உள்ளார்.

மகாராஜா நிறுவனத்தின் ஊடகங்கள் மீது மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு 48 மணி நேரத்தில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version