Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொள்ளையர்களுக்கு இலங்கை அரச ஆலோசனை

மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்கள் மத்தியிலிருந்தான எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் உளவியல் யுத்தமாகவும் புதிய ஒடுக்கும் தந்திரோபாயமாகவும் இலங்கை அரசே திட்டமிட்ட குற்றச் செயல்களை புரிந்து வருகிறது என்ற சந்தேகம் பரவலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய கொள்ளை முயற்சிகள் ஏனைய தமிழ்ப் பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
வடபகுதிகளில் இடம்பெற்று வந்த கொள்ளை, கடத்தல்கள், கொலைச் சம்பவங்கள் மக்களை பெரும் பீதியில் வாழவைத்திருந்த நிலையில் ஊடகங்கள் கடும் முயற்சியொன்றை மேற்கொண்டு அதனை வெளியுலகிற்குத் தெரியப்படுத்திருந்தன. பின்னர் இச்சம்பவங்கள் தொடர்பாக கவனம் செலுத்திய அரசாங்க அமைச்சர்கள், பாதுகாப்புத் தரப்பினர், ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் கே.பி. எனப் பலரும் மக்கள் அதிக நகைகளை அணிந்து வெளியே செல்வதுதான் பிரச்சினைக்கு மூல காரணம் எனக்கூறியிருந்ததுடன் அதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனைகைளயும் வழங்கியிருந்தார்கள்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு கிளிநொச்சி ஊரியான் பகுதியில் இரு வீடுகளுக்குள் புகந்த கொள்ளையர்கள், வீடுகளில் இருந்தவர்களை பச்சை மட்டையால் தாக்கியதுடன் பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர். இரவு 11 மணிக்குச் வீடுகளுக்குள் புகந்த கொள்ளையர்கள் அதிகாலை 4 மணி வரை அங்கு நின்றிருக்கின்றனர் ! அடித்துத் துன்புறத்தியே நகை மற்றும் பணத்தை வாங்கியிருக்கின்றனர் !!
தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இருக்கிற பிரச்சினை இதற்கு என்ன ஆலோசனைகளைச் சொல்வது என்பதுதான். இம்மறை இந்தக் கொள்ளையர்களுக்கு சில ஆலோசனைகளைச் சொல்லிப் பார்க்கலாம். வீதியில் அதிக நகைகளை அணிந்து செல்பவர்களிடம் மட்டும் கொள்ளையடியுங்கள். அதுதான் சகலருக்கும் வசதியானது.

Exit mobile version