Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொல்லப்பட்ட 30 உறுப்பினரின் சடலங்களில் பிரபாகரன் சடலமும் காணப்பட்டது : சரத் பொன்சேகா

முல்லைத்தீவு மாவட்டத்தின் இரட்டைவய்க்கல்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் நடைபெற்றதாகவும், ஏப்ரல் மாதம்19ம் திகதி யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார். அதன் பின்னர் மே மாதம் 19ம் திகதி வரையில் கேணல்கள்,லெப்டினன் கேணல்கள் தலைமையில் யுத்தம் தொடர்பான சுத்தம் செய்யும் பணிகளே மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தாம்மேற்கொண்ட சீன விஜயம் தொடர்பில் விமர்சனம் செய்யும் தரப்பினர், யுத்த களநிலவரங்களை அறியாது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலவீனப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே தாம் சீனாவிற்கு விஜயம் செய்தாகத்தெரிவித்துள்ளார்.
தம்மை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வரும்தரப்பினர் இராணுவ தந்திரோபாயங்கள் பற்றி எதுவும் தெரியாதவர்களாகவே கருதப்பட வேண்டுமெனஅவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த கள நிலவரங்களை கருத்திற் கொண்டு ஐந்துதடவைகள் சீன விஜயத்தை ஒத்தி வைத்தாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டமை உறுதிசெய்ததன் பின்னரே தாம் சீன விஜயத்தை மேற்கொண்டதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சீன விஜயத்தின் போது நாள் ஒன்றுக்கு மூன்றுதடவைகள் கொழும்பில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டறிந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த வலயத்தில் சிக்கியிருந்த 85000 பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பிலேயே தாம்கூடுதல் கவனம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார். பிரபாகரனும் 100 விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் நடைபெற்ற யுத்தம் பற்றியே பலர் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மே மாதம் 17ம் திகதி பிற்பகல் 2.00மணியளவில் நந்திக்கடல் பிரதேசத்தில் யுத்தம் நடைபெற்றதாகவும் மே மாதம் 19ம் திகதி காலை 10.00 மணியளவில் புலிகளின் 30 உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருந்தனர் என அவர்தெரிவித்துள்ளார். இந்த சடலங்களில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரனின் சடலமும் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version