Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொலை செய்தது வாரன் ஆண்டர்சன் -நஷ்ட ஈடு இந்திய மக்கள் வரிப்பணத்தில்.

அமெரிக்க கெமிக்கல் நிறுவனமான யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984- ஆம் ஆண்டில் ஏற்பட்ட விஷவாய்வுக் கசிவில் பாதிக்கப்பட்டு 20,000 பேர் வரை ஊனமாகி பல லட்சம் பேர் வரை பலியாகினர். ஆனால் இதற்குப் பொறுப்பான குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியும் அவரது சகாக்களும் இந்நிலையில் இது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பு இந்தியா முழுக்க அதிர்ச்சியலைகளை ஏற்படுத்த இப்போது வாரன் ஆண்டர் சன் செய்த கொலைக்கு வாரன் ஆண்டர்சனைத் தண்டிக்காலம் தப்பவிட்ட ராஜீவின் அரசியல் வாரிசுகளோ இந்திய மக்களின் வரிப்பணத்தில் அதில் விமோசனம் தேடுகிறார்கள். போபால் விஷவாய்வுக் கசிவு பாதிப்பு தொடர்பாக ஆராய ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர் குழு தனது பரிந்துறைகளை வழங்கியிருக்கிற்து. போபால்விஷவாயு கசிவு சம்பவத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை, இந்தியாவுக்குக் கொண்டு வருவதும் அமைச்சர்கள் குழுவின் முக்கியப் பரிந்துரைகளில் உள்ளது. 1984-ல் போபாலில் ஏற்பட்ட விஷவாயு கசிவு சம்பவத்தில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 37 ஆயிரம் பேர் நிரந்தரமான உடல் பாதிப்புக்கு உள்ளாகினர். 5 லட்சம் பேருக்கு பல்வேறு உடல் நலக் குறைவுகள் ஏற்பட்டன. இதில் மரணமடைந்த குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 3 லட்சமும் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போபால் நினைவு மருத்துவமனையை நவீனமாக சீரமைத்து அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் இக்குழு பரிந்துரைத்திருக்கிறது.

Exit mobile version