Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொலையாளிக்கும் கொல்லப்பட்டவனுக்கும் இன்றும் சமநீதி!

Immanuvel
இமானுவேல் சேகரன்

ராமநாதபுரம்: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுதினம் மற்றும் பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடை பெறுவதையொட்டி, இன்று முதல் இரண்டு மாத காலத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்படுகிறது. வரும் 11ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுதினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதேபோல அடுத்த மாதம் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பசும்பொன்னில் தேவர் குருபூஜைவிழா நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுஅமைதியை கருத்தில் கொண்டும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறுகிறது.  இந்த உத்தரவை அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பரிந்துரையின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பிறப்பித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு இன்றுமுதல் 2 மாத காலத்துக்கு அமலில் இருக்கும். இந்த தடை உத்தரவு காலத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

11.09.2011 அன்று தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் 54வது நினைவு குருபூஜை நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை வந்த மக்கள் மீது ஜெயலலிதா அரசின் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1. பல்லவராயனேந்தல் கணேசன் 2.வீரம்பல் பன்னீர் 3. மஞ்சூர் ஜெயபால், 4. சடையனரி முத்துக்குமார் 5. கீழகொடுமலூர் தீர்ப்புக்கனி 6. காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் கொல்லப்பட்டனர். இளையான்குடி துப்பாக்கிச் சூட்டில் ஆனந்த் என்ற மாணவன் குண்டடிபட்டான். மதுரையிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 1. ஜெயப் பிரகாஷ், 2. பாலசுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமுற்றனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அதே வேளை சாதி வெறியன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விழாவில் ஜெயலலிதா உட்பட தமிழகத் தலைவர்கள் கலந்து கொள்வது வழமை.
1957- இல் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனை தனக்கு சமமாக நாற்காலியில்

அமர வைத்து பேச வைத்த காரணத்தாலும், வழக்குரைஞரான சேகரனின் வாதத்திறமையால் மிரண்டு போனதாலும் முத்துராமலிங்கம் செகரனை தனது அடியாட்களை வைத்து வெட்டிக் கொலைசெய்தார்.

Exit mobile version