Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொலையாளிகளின் ஒன்று கூடலுக்கான அழைப்பு!

புலம் பெயர் நாடுகள் மற்றும் இலங்கை அரச ஆதரவாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் மகிந்த அரசு அழைப்பிதழ் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. சனல் 4 இன் ஆவண மற்றும் செய்திப் கோப்புக்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்களை எதிர்கொள்வது குறித்த கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சாரி சாரியாக மனிதக் கொலைகளை நடத்தில் சமூகவிரோதிகள் எவ்வித பய உணர்வுமின்றி ஆட்சி நடத்துவது மட்டுமன்றி,இப்போத்தும் மக்கள் மீது பயங்கரவாதத்தைப் பிரயோகித்து வருகின்றனர்.
இராணுவத்தின் உயர் அதிகாரிகள் இருவர் சனல் 4 சேவைக்கு கோரப் படுகொலைகள் நடைபெற்ற முறைமை குறித்து சாட்சி வழங்கியிருந்தமையும், அக்கொலைகள் இலங்கை அரசின் நேரடி உத்தரவின் அடிப்படையிலேயே நடந்துளது என்பதையும் குறிப்பிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் இதே போன்ற படுகொலைகள் இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்தப்பகுதியிலும் அரச பயங்கரவாதங்களால் நிறைவேற்றப்படலாம் என்பது மனிதாபிமானம் கொண்ட அனைவரினதும் கருத்தாகும்.

இதே வேளை பொறுப்பற்ற காணொளிக்காட்சிகளை ஒளிபரப்புவது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம், சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version