மார்க்சிச லெனினிசக் கட்சியாகத்(ML) தன்னை அறிமுகப்படுத்தும் குர்தீஷ் தொழிலாளர் கட்சி மிகக் குறுகிய காலத்தில் மக்கள் அமைப்புக்களை உருவாக்கி பெரும் வளர்ச்சிகண்டிருந்தது. துருக்கி பகுதியில் வாழும் குர்தீஷ் இன மக்களுக்கும் துருக்கிய இஸ்லாமிய அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுவருகிறது.
கொலைசெய்யப்பட்ட மூன்று பெண்களும் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக இருப்பதால் துருக்கிய அரசின் உளவுத்துறையே இந்தக் கொலைகளைத் திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் என்று ஊடகங்கள் ஊகம் வெளியிட்டன.
சிரியப் பகுதியிலுள்ள குர்தீஷ் விடுதலைப் போராளிகள் அங்கு அரசு ஒன்றை அமைத்துள்ளனர். துருக்கியின் எல்லைப் பகுதியிலுள்ள பல பிரதேசங்களை இப் போராளிகள் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர். துருக்கியின் எல்லையில் குர்திஷ்தான் கொடிகளைப் பறக்கவிட்டுள்ளனர். துருக்கிய இஸ்லாமியப் ஆட்சியின் பிரதமர் ஏர்ட்கன் துருக்கிய தமது கட்டுப்பாட்டை எல்லைகளில் இழந்துள்ள நிலையிலேயே சமாதானத்திற்கான பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார்.
இந்த நிலையில் ஊடகங்கள் குறிப்பிடுவது போன்று துருக்கிய அரச சார்பு அலகுகளே மூன்று பெண்களையும் கொலை செய்வதற்கு முன்வந்தனர் என்பது மிக அதிக நிகழ்தகவைக் கொண்டிருக்கலாம்.