இந்நிலையில் பாலஸ்தீனம் என்பதை ஒரு நாடாக ஏற்கப் போவதில்லை என்று சொல்லும் விதமாக, பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான, தற்போது இஸ்ரேல் வசம் உள்ள மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிய குடியிருப்புகளைக் கட்டுவது என்று இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது. அப்பகுதியில் யூதர்களை பெருமளவில் வசிக்க வைப்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.