Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொலம்பியா புரட்சிப்படையினர் கொலை?

மார்க்ஸ்சிஸ்ட் புரட்சிப்படையினர் கொலம்பியாவில் 1960-ஆம் ஆண்டு தொடங்கி கெரில்லா முறையில் போராடி வருகின்றனர்.இந்நிலையில் கொலம்பியாவில் புரட்சிப் படையின் கொரில்லா பிரிவினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இருவேறு மோதல்களில் கொரில்லா படையினர் 12 பேரும், ராணுவ வீரர்கள் 6 பேரும் பலியாயினர். மத்திய கொலம்பியா மற்றும் வெனிசுலா நாட்டு எல்லையில் இந்த மோதல்கள் நிகழ்ந்துள்ளன. கொலம்பியாவில் அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் புரட்சிப் படையினர் போராடி வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி ராணுவத்தினர் மற்றும் போலீஸலரைக் கொல்வது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய கொலம்பியாவில் பதுங்கி இருந்த புரட்சிப் படையின் கொரில்லா பிரிவினர் மீது ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது. இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரம் கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. முடிவில் கொரில்லா படையின் கமாண்டர் ஒருவர் உள்பட 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 4 பேர் பெண்கள். இந்தத் தாக்குதலில் வான்படையினரும் ஈடுபட்டனர். அதே நேரத்தில் வெனிசுலா நாட்டு எல்லைப் பகுதியில் நிலை கொண்டிருந்த ராணுவத்தினர் மீது புரட்சிப் படையினர் திடீர் தாக்குதல் நடத்தி, 6 வீரர்களைக் கொன்றனர். கெரில்லாப் படையில் இப்படையில் சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வீரர்கள் வரை உள்ளனர். ஏழைகளைச் சுரண்டும் பணக்காரர்களுக்கு எதிராகவும், கொலம்பிய அரசியலில் தலையீடும் அமெரிக்காவை எதிர்த்தும் போராடுவதை தங்கள் கொள்கையாக அறிவித்துள்ளனர்.

Exit mobile version