Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொன்சர்வேடிவ் கட்சி பணக்காரர்களுடையது : எட் மிலிபாண்ட்

cameronபிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளன. தான் பிரதமரானால், குறைந்த ஊதியம் பெறுவோருக்கு வரி விலக்கு வழங்குவேன் எனவும், வீடு வாங்குவதற்குரிய வசதிகளை அதிகரிக்கப் போவதாகவும் டேவிட் கமரன் அறிவித்துள்ளார். இன்றைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரனின் ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களின் எஞ்சியுள்ள பணத்தையும் சுரண்டி பல்தேசிய நிறுவனங்களிடம் ஒப்படைத்தார். பிரித்தானியாவில் வாழும் 1 வீதமானவர்களின் நலனுக்காக 99 வீதமானவர்கள் வங்கிகளுக்கு பில்லியன்களை வாரி இறைத்தார்கள். இரண்டு பிரதான கட்சிகளும் வங்கிகளின் சரிவைத் தூக்கி நிறுத்துவதற்காக மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் பிரதம வேட்பாளர் எட் மிலிபாண்ட், கொன்சர்வேட்டிவ் கட்சி என்பது பணக்கரச் சமூகத்தின் கட்சி என்று கூறினார். இன்று உலத்தையே ஆட்சி செய்யும் பெரு வியாபார நிறுவனங்களான பல்தேசிய நிறுவனங்கள் பிரித்தானியாவைத தளமாகப் பயன்படுத்த தொழிற்கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே ஆதரவு வழங்கப்பட்டது.

தேர்தல் விஞாபனங்கள் மீது பிரித்தானியர்கள் நம்பிக்கை வைப்பதில்லை என பேராசியர் ஜொனதன் ரொஸ்லான்ட் தெரிவித்தார்.

இலாப நோக்கில் மட்டும் பொருளை உற்பத்தி செய்யும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு மக்களைக் குறித்துத் துயரடைவதில்லை அவர்கள் போராடிவிடக் கூடாது என்பதற்காகவும், அவர்களைப் பயன்படுத்தி இலாபமடைவதற்காகவும் மட்டுமே மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. இன்று மக்கள் நலத் திட்டங்களையும் அழித்துவரும் நிலையில் மக்கள் புதிய சமூகத்தின் தேவையை உணர்ந்து வருகின்றனர். பாராளுமன்ற வாக்குக் கட்சிகள் பெரும் வணிக நிறுவனங்களுக்காக மட்டுமே செயற்படும் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இப் பல்தேசிய நிறுவனங்களே எட் மிலிபாண்டிற்கும், டேவிட் கமரனுக்கும் தேர்தல் பிரச்சார நிதியை வழங்கி வருகின்றன.

வேறு வகைப்பட்ட ஜனநாயகப் பொறிமுறை ஒன்றை எதிர்பார்க்கும் மக்கள் போராட எழுந்தால் பல்தேசிய நிறுவனங்களுக்கான பாராளுமன்ற ஜனநாயகம் அழிக்கப்பட்டு மக்கள் ஜனநாயகம் தோன்றும்.
உற்பத்தி தனியார்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்படும்.

Exit mobile version