இந்நிலையில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அரசாங்க தரப்பை மட்டும் சந்தித்துச் சென்றமை பெரும் தவறு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
படகுகளை நிறுத்துவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்குவந்த ஸ்கொட் மொரிசன் மூர்க்கத்தனமான ஏகாதிபத்திய அடியாள். ஏகாதிபத்தியங்களுகுத் தமிழ்ப் பேசும் மக்களைக் காட்டிக்கொடுக்கும் தலைமைகள் அனைத்தும் முள்ளிவாய்க்காலில் உலக மக்களின் ஒரு பகுதியை இரத்ததால் குளிப்பாட்டியவர்கள். சொந்தமாகப் போராடத் திரணியற்ற கோளைகள் மக்களைக் காட்டிக்கொடுத்து அருவருப்பான அரசியலில் ஈடுபடுகின்றனர். மற்றொரு அழிவிற்கு அடிக்கல் நாட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலாவதியாகிவிட்டது என மொர்சன் போன்ற அவர்களின் கொலைகார நண்பர்களே அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் தம்மை சந்திப்பார், பேச்சுவார்த்தை நடத்துவார் என தாம் பெரிதும் எதிர்பார்த்ததாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். இவ்விடயம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு தமது கண்டனத்தை தெரிவிக்கவுள்ளதாகவும் இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதுவரிடம் இவ்விடயம் குறித்து பேசவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.