அதிகாரமளிக்கக்கூடிய நடவடிக்கைகளில் முன்னகர்வை மேற்கொள்ளவேண்டிய தேவை எமக்கு உள்ளது. ஆனால்,சிறியதொரு நாட்டில் சமஷ்டி தொடர்பான ஒரு பிரச்சினை உள்ளது.அது அதிகளவுக்கு பிளவுகளை ஏற்படுத்தக்கூடியது.
கொசோவோவை ஏடுத்துக்கொண்டால் அவர்கள் (மேற்குலகு) சுயாட்சியை வழங்குமாறு கூறினார்கள்.ஒருமைப்பாட்டுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிப்போம் என்று தெரிவித்தனர்.ஆனால், இரு வருடங்களின் பின்னர் சுதந்திரத்திற்கு அவர்கள் ஆதரவு அளித்தனர்.வாக்குறுதியானது தெளிவானமுறையில் வாக்குறுதியாக இருக்கவேண்டும்.
நாங்கள் கவனமாக இருக்கவேண்டியுள்ளது என்ற ரஜீவ விஜயசிங்க “இந்து’ பத்திரிகைக்கு இந்தியத்தலைநகர் புதுடில்லியில் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அரசியல் பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய தேவையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.ஏனெனில் சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் கொழும்பு மேற்கொண்ட சில பாரபட்சமான நடவடிக்கைகளால் அரசியல் பிரச்சினை குறித்து கவனத்தை செலுத்தவேண்டிய தேவையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
புதிய தலைமுறை தமிழ் தலைவர்கள் உருவாகிவருகின்றனர்.அடிமட்டத்திலிருந்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு இதுவே தருணமாகும்.1987 இல் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அமுல்படுத்த ஆரம்பிப்பதன் மூலம் அடிமட்டத்திலிருந்து ஜனநாயகத்தை வலுப்படுத்த இதுவே தருணம் என்றும் ராஜிவ விஜயசிங்க கூறியுள்ளார்.